`திருச்சி சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி:

0
Business trichy

`திருச்சி  சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி:

Rashinee album

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையிலுள்ள கைதிகளை வாரம்தோறும் 3 நாட்கள் உறவினர்கள் மனு போட்டு பார்த்து வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, கைதிகளைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ காலில் பேசும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ,இதற்காக திருச்சி மத்திய சிறையில் புதிதாக 6 செல்போன்கள் வாங்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் நேரடியாக சிறைக்கு வந்து மனு போட்டு பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள கிளை சிறைகளில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் பார்க்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.  அதன்படி, திருச்சியில் மணப்பாறை, லால்குடி, முசிறி, துறையூர், உள்பட 9 இடங்களில் உள்ள கிளை சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய  உறவினர்கள் மனு போட்டு பார்த்து பேசினர். ஆனால் திருச்சி மத்திய மற்றும் பெண்கள் சிறை ஆகியவற்றில் உள்ள கைதிகளை பார்க்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த சிறைகளில் உள்ள கைதிகள் தொடர்ந்து செல்போன் வீடியோ கால் மூலம் தங்களது குடும்பத்துடன் பேசி வருகிறார்கள்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.