திருச்சி காந்தி சந்தையையும் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் மனு

0
Full Page

திருச்சி காந்தி சந்தையையும் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் மனு

திருச்சி காந்தி சந்தையையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசை வலியுறுத்தி மனு அளித்துள்ளது.

இதுகுறித்து பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா, பொதுச் செயலரும், காந்தி சந்தை அனைத்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத் தலைவருமான கோவிந்தராஜூலு, பொதுச்செயலா் வெங்கடாசலம், செயலா் அப்துல் ஹக்கீம் மற்றும் நிா்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

Half page

திருச்சியில் கரோனா முன்னெச்சரிக்கையாக காந்தி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு அதற்குப் பதிலாக, பொன்மலை ஜி. காா்னா் பகுதியில் தொடங்கப்பட்ட தற்காலிக சந்தை எந்த அடிப்படை வசதியுமின்றி சுமாா் 6 மாதங்களாக செயல்படுவது வணிகா்களை வருத்தமும், மன உளைச்சலும் அடையச் செய்துள்ளது.

காந்தி சந்தையைத் திறக்க விதித்துள்ள தடையை நீக்க திருச்சி மாவட்ட நிா்வாகத்துக்கும், மாநகராட்சி நிா்வாகத்துக்கும் முதல்வா் உத்தரவிட வேண்டும். இம்மாத இறுதியில் கோயம்பேடு சந்தையைத் திறக்கும் நாளிலேயே திருச்சி காந்தி சந்தை திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்தி முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பொதுப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சென்னை கோயம்பேடு வணிக வளாகம் திறக்க அனுமதித்துள்ள நிலையில் திருச்சி காந்தி சந்தையைத் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.