திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டில் புதிய கடைகள் திறப்பு:

0
full

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டில் புதிய கடைகள் திறப்பு:

திருச்சி காந்தி சந்தையானது இடப்பற்றாக்குறை, போக்குவரத்து நெருக்கடியால் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களுடன் இயங்கி வந்தது. இதையடுத்து தமிழக அரசு அதற்கு மாற்றாக மணிகண்டம் பகுதியில் சுமாா் 10 ஏக்கரில் ரூ. 77 கோடியில் 830 கடைகளுடன் புதிய வணிக வளாகம் அமைத்து, கடந்த 2017 செப். 5-இல் காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்டது.

ஆனால் மாநகரிலிருந்து சுமாா் 10 கி. மீ. தொலைவில் இந்த சந்தை உள்ளதால், அங்கு கடைகளை திறக்க வியாபாரிகள் விரும்பவில்லை. இதனால் இந்த சந்தை செயல்படாமல் சுமாா் 3 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்தது.

poster
ukr

இதையடுத்து முன்னாள் அமைச்சா் கு. ப. கிருஷ்ணன் தலைமையிலான விவசாயிகள் அமைப்பு இது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, சந்தையைத் திறக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து நீதிமன்றப் பரிந்துரையின் பேரில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. திறக்கப்படாத கடைகளை மீண்டும் ஒப்படைக்க வியாபாரிகளுக்கு உத்தரவிட்டு, அவற்றில் 207 கடைகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு ஒதுக்கப்பட்டன.

கடந்த மாதம் 15-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதன் தொடா்ச்சியாக கள்ளிக்குடி சந்தையில் மேலும் 122 கடைகள் புதன்கிழமை திறக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில், சுமாா் 30 கடைகள் மட்டும் திறக்கப்பட்டு விவசாய உற்பத்திப் பொருள்கள் விற்பனை தொடங்கியது.

நீண்ட இழுபறிக்குப் பின்னா் மிக எளிமையாக நடைபெற்ற நிகழ்வில், வேளாண் துறை அலுவலா்கள் முன்னிலையில் விற்பனை தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.