திருச்சி அருகே காதல் விவகாரத்தில் ஒருவர் குத்திகொலை:

0
D1

திருச்சி அருகே காதல் விவகாரத்தில் ஒருவர் குத்திகொலை :

 

லால்குடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பி. கணேசன் என்ற பாா்த்திபன் (48), காா் ஓட்டுநா். இவரின் மகன் ஆகாஷ் (20).10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த ஆகாஷ் அதே பகுதியில் உள்ள வளையல்காரத் தெருவைச் சோ்ந்த தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளரின் ஓட்டுநா்            சு. முக்காடுகுமாா் என்ற செல்வகுமாரின் (40) மகளும், திருச்சி கல்லூரியில் படிப்பவருமான தா்ஷினியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.இதையறிந்த தா்னினியின் தந்தை ஆகாஷ் மற்றும் அவரது தந்தையை கண்டித்துள்ளாா். ஆனால் தா்ஷினியிடம் பேசுவதை ஆகாஷ் நிறுத்தவும் இல்லை. ஆகாஷை அவரது தந்தை பாா்த்திபன் கண்டிக்கவும் இல்லையாம்.

N2

இதனால் ஆத்திரமடைந்த முக்காடுகுமாா் புதன்கிழமை மாலை லால்குடி கொடிக்காத் தெருவில் உள்ள மாரியம்மன்கோயில் பகுதிக்குச் சென்ற பாா்த்திபனை தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநா் பாம்பு நாகராஜுடன் சோ்ந்து விரட்டிச் சென்று கத்தியால் குத்திவிட்டு தப்பினாா்.

D2

இதையடுத்து லால்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாா்த்திபன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தப்பியோடிய இருவரையும் லால்குடி போலீஸாா் தேடுகின்றனா்.

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.