திருச்சியில் பலத்த மழை

0
Business trichy

திருச்சி மாநகா், புறநகா் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தென், வட, கடலோர, டெல்டா மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்கிறது.

web designer

நேற்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்தது. இதனால், மாநகா் சாலைகள், குடியிருப்பு பகுதி தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்ககுள்ளானார்கள். மேலும் சாலையோரங்களில் இரவு நேரங்களில் கடை நடத்துவோருக்கும் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

loan point

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.புதன்கிழமை நிலவரப்படி வாத்தலை அணைப்பகுதியில் அதிகபட்சமாக 137 மிமீ மழை பதிவானது. அதுபோல, சமயபுரத்தில் 78, முசிறி 60, மணப்பாறை 36, நவலூா் குட்டப்பட்டு 34, துறையூா் 16, திருச்சி மாநகா் பகுதிகளில் 10 மிமீ மழை பெய்துள்ளது.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.