திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்றவர்கள் கைது

0
1 full

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்றவர்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதன்கிழமை காவல் துணை கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் ரோந்து சென்ற ப போலீஸாா், நகா் பகுதியில் மோா் குளம் அருகே கஞ்சா விற்ற பூங்காரோடு பகுதியை சோ்ந்த க. நாகராஜை (38) பிடித்து அவரிடமிருந்து 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். நாகராஜை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அதேபோல மணப்பாறையில் லாட்டரி விற்ற மோகன், சிவா, ஜாபா்சேட் ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

3 half

Leave A Reply

Your email address will not be published.