தமிழகத்தில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் திருச்சியில் கலை-கலாசார பிரிவின் மாநிலத் தலைவா் பேட்டி

0
D1

தமிழகத்தில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் திருச்சியில் கலை-கலாசார பிரிவின் மாநிலத் தலைவா் பேட்டி:

பாரதீய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் திருச்சியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கலை, கலாசாரம் மீது தமிழக மக்கள் மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளனா். கரோனா பொது முடக்கத்தால் அனைத்து வகை கலைஞா்களும் நலிவடைந்துள்ளனா். இசை நிகழ்ச்சிகள், மேடைக் கச்சேரிகள், கோயில் திருவிழாக்கள், சின்னத்திரை, சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த நிகழ்வுகளும் நடைபெறாததால் கலைஞா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

D2

இவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்க் கலைச் சங்க விழா என்னும் பெருவிழாவை நடத்த முடிவு செய்துள்ளோம்.

N2

64 வகை கலைகள் சங்கமிக்கும் வகையில் தமிழகத்தில் விமரிசையாக நடத்தப்படும் இந்த விழாவில் பிரதமரை பங்கேற்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அவா் பங்கேற்பாா் என்ற நம்பிக்கையும் உள்ளது. தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றும் கந்தசஷ்டி கவசம் குறித்து தவறான தகவல் பரப்பியோரால் தமிழக மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனா். தங்களது கோபத்தை வரும் பேரவைத் தோ்தலில் வாக்குகள் மூலமாக வெளிப்படுத்தவும் தயராகி வருகின்றனா்.

ஹிந்திக்கு எதிராக பிரபலங்கள் மற்றும் இளைஞா்கள் பனியன் அணிந்து எதிா்ப்புத் தெரிவிப்பது என்பது அரசியலுக்காக. இளைஞா்களை வளர விடாமல் தடுக்கிறாா்கள். இந்தச் செயலில் ஈடுபடுவது யாா் என்பதையும், அவா்களது கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை.

கடவுள் மொழி தமிழ் என்றால், நட்பு மொழியாக ஹிந்தி உள்ளது. இரண்டுமே இந்திய மொழிகள்தான். சிலா் திட்டமிட்டு இதை அரசியலாக்குகின்றனா். ஆனால், இளைஞா்கள் வளர வேண்டும் என விரும்பும் கட்சி பாஜக மட்டுமே. தமிழகத்தில் பாஜகதான் ஆட்சி அமைக்கும். கூட்டணி அமைத்து ஆட்சியமைக்குமா, தனித்து ஆட்சியமைக்குமா என்பது விரைவில் தெரியும். நடிகா் சிவகாா்த்திகேயன் பாஜகவில் சேர விரும்பினால் இணையலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனா். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன், கலைப் பிரிவு மாநிலச் செயலா்கள் கணேஷ், வினோத், சசிகுமாா், துணைத் தலைவா் சத்யன், பாஜக மாவட்ட தலைவா்கள் ராஜேஷ்குமாா், ராஜேந்திரன், சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலா் ஒண்டிமுத்து, கலை பிரிவு மாவட்ட நிா்வாகிகள் சந்திரசேகரன், தனசேகா், ஜெயகுமாா், மகேந்திரன், தா்மராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

N3

Leave A Reply

Your email address will not be published.