ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்

ரயில்வே பணியில் உள்ள சூர்யா

0
D1

ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் திருச்சி ரயில்வேயில் பணி புரியும் சூர்யா.

அதற்கான பயிற்சியில் இருக்கும் இவர், கடந்த வருடம், கவுகாத்தியில் நடந்த 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடிய சூர்யா 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 15.4 நிமிடங்களில் கடந்தார். அடுத்து 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 32.39 நிமிடத்தில் இலக்கை கடந்து தங்கம் வென்று, புதிய சாதனையும் படைத்தார்.

புதுக்கோட்டை அருகேயுள்ள கவிநாடுதான் சூரியாவுக்கு பூர்வீகம். இவரது தந்தை லோகநாதன் வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது அப்பா ஒரு தடகள வீரர், இவர், புதுக்கோட்டை அருகே கவிநாடு பகுதியில் ‘யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என்ற விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

D2

தடகளப் பயிற்சி கொடுத்து, பல நூறு இளைஞர்களை பதக்கங்கள் வெல்லவைத்த இவர். பயிற்சியாளராக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இதுவரை 700-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் உருவாக்கி உள்ளார். இதில் பலர், தேசிய சாம்பியன்கள். இன்று பெண்களுக்கான 5,000, 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனையாக இருக்கும் சூர்யா, இவரது மகள். நேஷனல் சாம்பியன்களான ஜி.லட்சுமண், லோகநாதன், நசீர், பொற்பனையான், கவிதா என இவரின் மாணவர்கள். சங்கீதா, ஐஸ்வர்யா, வனிதா, முருகானந்தம் என அடுத்த தலைமுறையினரையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்

லோகநாதனுக்கு, மூன்று பெண் குழந்தைகள், அவர்களை விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்ட லோகநாதன், தனது மகள்களான சத்தியகலா, பிரியதர்ஷினியும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக வளர்த்தெடுக்க, அடுத்து அவர்கள் தடகளப்போட்டிகளில் பரிசுகளை வெல்ல ஆரமித்தனர்.

N2

இவர்களில் கடைசி மகளான சூர்யா, தனது சகோதரிகளுக்கு இணையாக ஓட ஆரமித்தார். அவரின் ஆர்வமும் 6வயதில் ஆரமித்தது. கடந்த 20 ஆண்டுகளில் சூர்யா, வாங்கிய பரிசுகள் ஏராளம். பள்ளியிலும் கல்லூரியில் படிப்பில் முதல்மாணவியாக விளங்கிய சூர்யா, மருத்துவம், பொறியியல் என பல படிப்புகள் படிக்க வாய்ப்பு கிடைத்தது. னால் சூர்யாவோ, “எனக்குப் பிடித்தது விளையாட்டுதான், அதில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்” என தனது ஒலிம்பிக் கனவுக்கு தயாரான சூர்யா,

கடந்த வருடம் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டரை 15 நிமிடம் 45.75 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார். அதேபோல் 32 நிமிடம் 39 விநாடிகளில் 10,000 மீட்டர் கடந்து சாதனை படைத்தார்.

இதன்மூலம் 1999-ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் சுனிதா ராணி என்ற இந்திய வீராங்கனை 5,000 மீட்டரை 15. 56 விநாடிகள் ஓடிய சாதனையையும், கடந்த 2006-ம் ஆண்டு பிரிஜாஹதரன் எனும் இந்திய வீராங்கனையின் சாதனைகளை முறியடித்தார். இப்போது, சூர்யா பெங்களூரில் தங்கி கடுமையான பயிற்சிகளை எடுத்துவருகின்றார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தடகள வீரர்களால் ஜொலிக்கமுடியாமல் போனது.

ஆனால் இனி அப்படி நடக்காது. இனிவரும் காலங்களில் இந்தியாவின் பதக்க கனவு நிறைவேறும் என நம்பிக்கையோடு கூறுகிறார் சூர்யா. சூர்யா நம்பிக்கையோடு ஜெட் வேகத்தில் பறக்கிறார். அவர் சாதிக்க நம்ம திருச்சி இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்.
-பிரியதர்ஷன்

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

N3

Leave A Reply

Your email address will not be published.