இந்திய ஆடையின் மாற்றங்கள்…

0
Full Page

இந்தியாவில் பாரம்பரியமாகவும், கண்ணியமாகவும் உடையணியும் பாணி என நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல அம்சங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு இறக்குமதியான துணிகளில் மாறுபட ஆரம்பித்தது.

இந்தியாவில் பழங்காலத்தில் மக்கள் அணிந்திருந்த ஆடைகள் என்று பார்த்தால் அவை உடலில் அதிக பாகங்களை மூடாமல்தான் இருந்துள்ளது.
கிமு 300களைச் சேர்ந்த மௌரியர்கள் காலத்து சிலைகளைப் பார்த்தால் அதில் ஆண்களும் சரி பெண்களும் சரி இடுப்பை மறைக்க ஒரு துண்டும், மார்த் துண்டு ஒன்றை மட்டுமே உடுத்தியிருக்கிறார்கள். தைக்கபடாத ஆடைகள் கொண்டு உடுத்தியிருந்ததால் மற்ற உடல் பாகங்கள் மறைக்கப்படவில்லை.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளின் குப்தா சாம்ராஜ்ஜிய காலத்தை எடுத்துக்கொண்டால், தைத்த மேலாடையையும், பாவாடை போன்ற கீழாடை ஒன்றையும் அவர்கள் அணிந்திருந்தார்கள்.

கண்ணியமாக உடையணிவது என்பது காலத்துக்கு ஏற்பவும், இடத்துக்கேற்பவும், சமூகத்துக்கு ஏற்பவும் மாறுபட்டு வந்துள்ளது.
உடல் முழுக்க மறைப்பது மாதிரி உடையணிந்தாலோ, முக்காடு இட்டாலோதான் பெண்கள் கண்ணியமாக உடையணிந்திருக்கிறார்கள் என்ற நிலை எப்போதும் இருந்ததில்லை.

சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, சௌகரியமாக உடையணியும் முறையை பெண்கள் உட்பட அனைவரும் கைகொண்டுவந்திருந்தனர்.
தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால் காலனீய ஆட்சிக்காலத்தின் போதே கூட சில சமூகத்துப் பெண்கள் மேலாடை அணியாது இருந்துள்ளனர்.

Half page

வரலாற்றுப் போக்கில் இந்திய மக்களுக்கு கிரேக்கர்கள், ரோமர்கள், அரேபியர்கள், சீனர்கள் வெவ்வேறு கலாச்சாரத்தவருடன் தொடர்பு ஏற்பட, மக்களின் ஆடையில் அப்படியான கலாச்சாரங்களின் தாக்கத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 19ஆம் நூண்டில் சில பெண்கள் சேலை உடுத்தியிருந்தாலும், ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அது கண்ணியமாக இல்லை என பிரிட்டிஷ்காரர்கள் கருதியதால்தான், இந்தியப் பெண்களிடையே ரவிக்கை அணியும் வழக்கம் அதிகமானது.
வங்கப் பெருங்கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரரான சத்யேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானநந்தினி தேவிதான், சேலைக்கு உள்ளே பெண்கள் அணியக்கூடிய ரவிக்கை, சட்டை போன்ற மேலாடைகளை பிரப்பலப்படுத்தியவர் என்று கூறப்படுகிறது.

அந்நாளில் ரவிக்கை இல்லாத வெறும் சேலையுடன் கிளப்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் ரவிக்கை அணியத் துவங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில வார்த்தைகளான பிளவுஸ், பெட்டிகோட் போன்ற வார்த்தைகள் இந்திய மொழிகளில் புழக்கத்துக்கு வந்ததும் இந்த காலகட்டத்தில்தான் என ஆடை வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனா்.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

Quarter page

Leave A Reply

Your email address will not be published.