திருச்சி ஆதிகுடி

சிவாஜியும் ஜெமினியும் வாடிக்கையாளராக இருந்தனர்

0
1

அந்தகால நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், ஜெமினிகணேசன் பல நடிகர்கள் திருச்சி வந்தால் ஆதிக்குடி அடையைச் சாப்பிடாமல் போக மாட்டார்கள்.

திருச்சியின் பாரம்பரியமிக்க கடைகளில் ஒன்று விளங்கும் ஆதிக்குடி காபி கிளப். திருச்சி மெயின் காட் கேட் அடுத்த இப்ராஹிம் பூங்கா எதிரில் இருக்கிறது. இந்தக் கடையில் சுடச் சுட கிடைக்கும் வெண்ணெய் அடை அவியல், பட்டணம் பக்கோடா, ரவா பொங்கல் என ருசியோ ருசி.
1916-ம் ஆண்டு திருச்சி லால்குடியை அடுத்துள்ள ஆதிக்குடியைச் சேர்ந்த வெங்கட்ராம ஐயர் என்பவர் தங்கள் சொந்த ஊரின் பெயரில் இந்தக் கடையை துவங்கினார். நூறாண்டுகள் கடந்த ஆதிக்குடியில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால் பல தலைமுறைகளைக் கடந்து, ஆதிக்குடி காபி கிளப் அதே கைப்பக்குவத்தில் அதே ருசியில் மணக்கிறது.

2

ராமகிருஷ்ண அய்யரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய ஐந்து மகன்கள் கணேசனும் அவரது தம்பிகளான லெஷ்மி நாராயணன், கணேசன், நாராயணன், சத்தியவகிஸ்வன் ஆகியோர் வெவ்வேறு தொழில் செய்தாலும், கடையை விடாமல் நடத்தி வருகின்றார்.

4

இந்தக் கடையில் கொஞ்சம் வெளியே மொறு மொறு என்றும் உள்ளே மெது மெதுவென்று இருக்கும் பட்டணம் பகோடாவை சாப்பிட நிறையப் பேர் வாடிக்கையாளராக உள்ளனர். இங்குக் காலையில் ரவையை நன்கு குழையும்படி வேக வைத்து பெரிய மிளகு, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி என தேவையானவற்றை சேர்த்து பதமாக கிடைக்கும் ரவா பொங்கல் நடுவே வடை வைத்து லேசா சாம்பார் சேர்த்துச் சாப்பிட்டால் அவ்வளவு ருசி.
அடுத்து மதியம் 1 மணியில் இருந்து 4மணி வரை எப்போதும் சூடாக கிடைக்கும் வெண்ணெய் அடைக்குக் காய்கறி அவியலைச் சேர்த்து சாப்பிடலாம்.

ஆதிக்குடி திருச்சியின் பாரம்பரியமிக்க கடை என்பதைத் தனியே காட்டுகிறது.

(இந்த கட்டுரை  நம்ம திருச்சி 2017 இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

3

Leave A Reply

Your email address will not be published.