நம்பிக்கை மட்டுமே நம்மை வாழ வைக்கும்

- பேராசியர் முனைவர். வசந்தி

0
D1

நம்பிக்கை மட்டுமே நம்மை வாழ வைக்கும்

உணர்ந்து கற்றலும், புரிந்து கற்றலும் மட்டுமே மாணவர்களை இந்த சமுதாயத்திற்கானவர்களாக மாற்றும் என்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சுற்றுச்சுழல் உயிர் தொழில்நுட்பம் துறையில் பேராசிரியர் முனைவர்.வசந்தி.

திருச்சியில் சிறந்த தொழிலதிபரான முத்து நாராயணன்-விமலா குமாரி ஆகியோரின் 3வது மகள்தான் இந்த வசந்தி. இவரின் அண்ணன் மற்றும் அக்கா தந்தை ஆகியோர் இணைந்து தொழிலை கவனித்துக்கொள்கிறார். இவரின் அக்கா கணவர் பிரபல திரைப்பட கதை ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகரை திருமணம் செய்து, சென்னையில் வசித்து வருகிறார்.

D2

முனைவர்.வசந்தியை நம்ம திருச்சி இதழுக்காகச் சந்தித்தோம்.
“அப்பா எப்போதுமே எந்தச் செயலையும் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். அந்தச் செயல் பற்றிய சிறு எதிர் மறையான எண்ணங்கள் நமக்கு வரக்கூடாது என அடிக்கடி சொல்லுவார். ஆசிரியராக வேண்டும் என்பதுதான் என் முதல் கனவு. அந்தக் கனவுடன் படித்த நான், சில தவிர்க்க முடியாத காரண 10 நாட்கள் பள்ளிக்கு போக முடியவில்லை. அடுத்து பள்ளிக்குப் போன என்னை, நான் தவற விட்ட பாடங்களில் கேள்வி கேட்டார். பதில் சொல்லவில்லை என்றதும், என்னை மண்டியிட வைத்து ஆசிரியர் அடித்தார்.

அந்தப்பயத்தில் நான் படிக்க மாட்டேன் என வீட்டில் அடம் பிடித்தேன். மறுநாளே அப்பா என்னை ஒ.எம்.சி.ஏ. வில் சேர்த்துவிட்டார். அங்குதான் என் கனவுகள் துளிர்விட ஆரமித்தது. மாணவியான என்னைப் பாடம் நடத்த அனுமதித்தார்கள். அதன் பிறகு புனித சிலுவை பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன்.

புனித சிலுவை கல்லூரியிலேயே ஆங்கிலத்துறைக்கு நுழைவுத் தேர்வு வைத்தார்கள். அதில் நான் தோல்வி அடைந்தேன். அப்போது எங்கள் குடும்ப நண்பரும் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலாக பிஷப் கல்லூரியில் வேதியல்துறையில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இளங்கலை வேதியியல் முடித்தேன். 1984-ம் ஆண்டு பிஷப் கல்லூரியில் முதுகலை சுற்றுச்சுழல் உயிர் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் சேர்ந்தேன். கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தங்க பதக்கமும் பெற்றேன்.

கல்லூரி முடித்த எனக்குச் சென்னை புனித வளனார் கல்லூரியில் வேலைக் கிடைத்தது. அப்படியே ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்தேன். அடுத்து கோவை ராமகிருஷ்ணன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி.
அந்தக்கல்லூரியில் பணியாற்றி வந்த விஜயா என்பவர் டி.ஆர்.பி தேர்விற்கு விண்ணப்பிக்கக் கடைசி இரண்டு நாட்கள் இருக்கும்போது, என்னை விண்ணப்பிக்கச் சொன்னார். அன்று அவர் செய்த உதவி தான் இன்று நான் இந்தப் பணியில் இருக்கக் காரணம்.

N2

முதன்முதலில் பேராசியராக அரியலூர் அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அடுத்து 2004ல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டேன். கல்லூரியில் பணியாற்றியதற்கும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சிறிய அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இன்று பெரிய அளவில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2009-ம் ஆண்டு என்னுடைய உடல் நிலை மோசமாகவே, நித்தியானந்தாவை சந்தித்தேன். தியானம், சித்த மருத்துவம் உள்ளிட்டவை தான் தற்போது என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது திடகழிவு மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டு வருகின்றேன். இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 200 முதல் 600 கிராம் கழிவுகளை இந்தச் சமுதாயத்திற்கு தருகின்றனர். இந்த விகித்தச்சாரம் 2025ல் பல மில்லியன் டன் கழிவுகளாக மாறும். எனவே இந்தக் கழிவுகளை மனிதனுக்குப் பயனுள்ளதாக மாற்ற முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இன்றும் நான் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன். நாம் ஒவ்வொருவரும் முதலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் அரசை மட்டும் குற்றம் சொல்லக் கூடாது மாற்றம் நம்மிடம் இருந்து வர வேண்டும். இந்தச் சமுதாயத்தில் இருந்து நான் அதிகளவில் பெற்றுக்கொண்டேன் அதை நான் இந்தச் சமுதாயத்திற்கு திருப்பிச் செய்ய வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மையில், தொடர் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. சிறந்த ஆராய்ச்சிக்கான விருதும், 2015 முதல் 2017 வரையிலான யுஜிசி ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழக அளவிலான விருதும் எனக்குக் கிடைத்தது. இந்த விருதுகள் என்னை இன்னும் இந்த சமுதாயத்திற்கு பொறுப்புள்ள மனிதராகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியுள்ளது.

இன்னும் 9 வருடங்கள் எனக்கு சா்வீஸ் இருக்கும் இதற்குள்ள நான் ஒரு புதிய கண்டுபிடிப்பை முடித்து இந்தச் சமுகத்திற்கு சமர்ப்பிப்பேன். அது திடக்கழிவு என்ற மாசுப்பட்ட குடிநீரை எப்படி இயற்கையான பொருட்கள் மூலம் சுத்தமான குடிநீராக மாற்ற முடியும் புதிய திட்டமும், அதற்கான உபகரணங்களும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்.

இது கிராமங்கள் தோறும் மிகக்குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

என்னுடைய வாழ்வில் என்னை ஊக்கப்படுத்திய முதல் மனிதர் அப்பா, அடுத்து எனது கணவர் ரவீந்திரநாத், அடுத்து பேராசிரியர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீபரமஹம்ச நித்தியானந்தா, சித்தா மருத்துவர் மருத்துவர் அன்பு கணபதி இப்படி ஒவ்வொரு மனிதர்களும் என்னுடைய உணர்வுக்கும், புரிதலுக்கும் உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தி உள்ளனர் இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவுகூறுகிறேன் என்றார்.

 

இந்த கட்டுரை 2019 நம்ம திருச்சி மே மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது

N3

Leave A Reply

Your email address will not be published.