ஸ்ரீசிவானந்த பாலாலயா, திருச்சி

0
full

ஸ்ரீசிவானந்தா பாலாலயா பள்ளி 1996 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் துவங்கப்பட்டது. பள்ளி தாளாளர்  கே.ஜி.மீனாட்சி தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பாபு உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

மாணவர்களை நட்பார்ந்த முறையில் நடத்துவதும், மாணவர்களை மையப்படுத்தி முன் உதாரணமாக விளங்குவதற்கும் கற்பிக்கும் கற்றல் செயல் முறைகளில் புதுமைகளுடன் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கல்வியினை வழங்கி வருகிறது. கல்வி வடிவமைப்பு வகுப்பறை மேலாண்மை நடைமுறைகள் மதிப்பீடுகள் புதுமையான உத்திகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் வகையில் அடிப்படை தகவல் முதல் அரிய தகவல்கள் அனைத்தையும் அறியும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, தகவல் களஞ்சியம், உடற்கல்வி, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், யோகா, தியானம், நன்னெறி நூல்கள் என பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்கள் நூலகத்தில் உள்ளன.

poster

மேலும் இணையதள நூலகம் எனும் மின்னனு நூலகம் அமைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட நூல்களுடன் உள்நாடு, அயல்நாடு ஆய்வு இதழ்கள் படிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. உடற்கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கைப்பந்து, கையுந்து பந்து, கோகோ, மேசை பந்து, ஜிம்னாஸ்டிக், யோகா, தியானம், ஸ்கேட்டிங், கராத்தே, தடகளம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் மாணவர்களை பங்கேற்க வைக்கிறார்கள்.

மாணவர்கள் விரும்பும் வகையில் வாராவாரம் சனிக்கிழமையில் தமிழ், ஆங்கிலம், இலக்கியம், இலக்கணம், அறிவியல், ஹிந்தி, ஓவியம், இயல், இசை, நடனம், நாடகம்,ரோபாடிக்ஸ், வேத கணிதம், அபாகஸ், ஜிம்னாஸ்டிக், கைவினை பொருட்கள் தயாரித்தல், வினாடிவினா, அஞ்சல் தலைகள் சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல், பணத்தாள்கள் சேகரித்தல், புகைப்படம் எடுத்தல், என பல்வேறு கலை சார்ந்த சங்கங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் விரும்பும் கலையில் ஈடுபடுத்தப்பட்டு துறை வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சர்வதேச சங்கமான செஞ்சிலுவை சங்கத்தின் ஜீனியர் செஞ்சிலுவை சங்கத்தில் விருப்பப்படும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மனிதாபிமான பொறுப்பினராக உருவாக்கும் வகையில் ஜேஆர்சி செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்களிடம் புதைந்துள்ள திறன்களை வெளி கொணரவும், இயற்கையை அறியவும், பிராணிகளிடத்தில் அன்பு செலுத்தவும் கல்வி செயல்பாடாகவும், சமுதாய செயல்பாடாகவும் சாரண, சாரணியர் இயக்கம் செயல்படுகிறது.

half 2

பள்ளியில் பயின்றவர்கள் இன்று மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்கறிஞராகவும், ஆன்றோர், சான்றோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் கூடுவார்கள்.
பள்ளியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டால் உடல்நலம் காக்கும் வகையில் பள்ளி வளாகத்திலே மருத்துவ வசதியுடன் கூடிய படுக்கை வசதியும் உண்டு.

பள்ளி அலுவல் நாட்களில் பிரைம் கிளினிக்கில் ஒரு செவிலியரும், மனநல ஆலோசகரும் பணியில் இருப்பார்கள். வருடமொரு முறை அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவர் மேற்பார்வையில் உடல்நல பரிசோதனையும் மேற்கொள்வார்கள். இயற்கை சூழவில் பள்ளி, காற்றோட்டமான வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீத்தடுப்பான் கருவிகளுடன் பள்ளி வளாகம் , விளையாட்டு மைதானம் என அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

பள்ளி செயல்பாடுகளை செல்பேசியில் குறுஞ்செய்தியாக தெரியபடுத்துவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர தில்லை நகர், உறையூர், கருமண்டபம், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், பாளையம், போதாவூர், நாச்சாண்டார் திருமலை, வியாழன்மேடு, எட்டரை, முள்ளி கரும்பூர், முதலைப்பட்டி, காவல்காரன்பட்டி உள்ளிட்ட வழித்தடங்களில் பள்ளி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு சிவானந்த பாலாலயாவின் சிறப்பு பள்ளி 
மனவளர்ச்சி குறைபாடு, டௌன் சின்ரோம், ஆட்டிசம், கவன குறைவு, கற்றல் குறைபாடு, கற்றலில் தாமதம், பேச்சு மற்றும் தொடர்பு கொள்வதில் சிரமம், இயல்பு மீறிய நடத்தை உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு கல்வி அளிக்கப்படுவதுடன் அனைத்து மாணவர்களுடன் இணைந்து ஒரே பள்ளியில் இன்க்ளுசிவ் எஜிகேசன் முறையில் கல்வி போதிக்கப்படுகின்றது. மேலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவ கூடுதல் ஆசிரியரும் இருந்து கல்வி போதிப்பதால் மாணவர்கள் உற்சாகமும், தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள். மேலும் பேச்சு பயிற்சி, ஒருங்கிணைந்த உணர்வு தூண்டுதல் பயிற்சி, புலன் தூண்டுதல் பயிற்சி, தசை பயிற்சி, நடத்தை மாற்று பயிற்சி, தொழிற் பயிற்சியுடன் உடற்கல்வியும், வழங்கப்படுகிறது.

இப்பள்ளியில் பயின்ற மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா 100 ஆண்டுகள் தேதியைக் கூறினால் கிழமையை கூறும் மதிநுட்பம் பெற்றவர். பிரியங்காவின் திறமைக்காக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் 2014 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற தலைசிறந்தவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரியங்காவின் நினைவாற்றல் திறமையை பாராட்டி மேதகு குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி விருது வழங்கி கௌரவித்தார். இப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்கள் உயர்நிலைக்கல்வி கற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அனைவரும் கல்வி கற்க சிவானந்த பாலாலயாவில் தேசிய திறந்த நிலைப்பள்ளி இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் கல்வியறிவு அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தேர்வுகளை ஆண்டு தோறும் நடத்துகிறது.

கிராமப்புற குழந்தைகளுக்கு மழலைக் கல்விக்காக பால்பவன் பள்ளி
சுவாமி சிவானந்த வித்யாசமிதி கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் வகையில் பால் பவன் பள்ளியினை துவக்குகிறது. புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதிய எண்ணங்கள், புதிய கனவுகள் , புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்கள்,

புதிய இலக்குகளுடன் கல்வி பயில விரும்புவோர் ஸ்ரீ சிவானந்த பாலாலயா, கிருத்திகா கார்டன்ஸ், பாளையம், அதவத்தூர், சோமரசம்பேட்டை, திருச்சி.
0431 – 2773543, 9443735437 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.