முசிறி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

முசிறி அருகேயுள்ள உமையாள்புரம் – செவந்திலிகபுரம் பகுதியில் திருச்சி – சேலம் வழியாக பெங்களுக்கு செல்லும் சாலை மாா்க்கத்தில் பழமை வாய்ந்த அரச மரம் சாலையில் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முசிறி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமாா் ஒரு மணி நேரத்தில் போக்குவரத்தைச் சரி செய்தனா்.
