மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள். முன்மாதிரியான முயற்சியில் திருச்சி பள்ளி

0
1 full

மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள். முன்மாதிரியான முயற்சியில் திருச்சி பள்ளி

கல்வி என்பது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல அனுபவத்தை வளர்ப்பது, மனித மாண்பை கற்றுக்கொடுப்பது, சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாக அந்த மாணவனை உருவாக்குவது என்று கல்வி நிலையங்கள் மாண்புகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ கல்வி நிலையங்கள் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

இப்படியான சமூக கட்டமைப்பு நவீன வளர்ச்சியின் அடையாளமாக கட்டப்படுகிறது. இந்நிலையில்தான் திருச்சி, பாலக்கரை, பொன்னையா மேல்நிலைப்பள்ளி முன்மாதிரியான திட்டங்களையும், மாணவர்களின் நலனை கொண்டு பல்வேறு வகையான திட்டங்களை பள்ளியின் தலைமையாசிரியர் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

2 full

கோவிட் 19 கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மத்திய,மாநில அரசுகளின் உத்தரவுப்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போனில் விளையாடுவது, சேட்டிங் செய்வது என பொழுதை கழித்து வருகின்றனர்.
இதை மாற்றும் விதமாக, காலம் பொன் போன்றது என்பார்கள் அந்தக் காலத்தை மாணவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கித் தர விரும்பிய பள்ளியின் தலைமையாசிரியர் கிவர்கிஸ் மேத்யூ அரசின் விதிமுறைகளை கருத்தில் கொண்டும், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் கல்வியை கொடுக்க வேண்டும் என்று எண்ணிய தலைமையாசிரியர் voice என்ற நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கு புதிய அப்ளிகேஷனை உருவாக்கி இருக்கிறார்.


அதன் மூலம் மாணவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வீடியோக்களை பார்த்து தங்கள் ஆசிரியர்கள் எடுத்த படத்தை மாணவர் கள் படித்துக் கொள்ளலாம். மேலும் இதில் என்ன சிறப்பு அம்சம் என்று பார்க்கும்பொழுது ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் அவர்கள் இணைய வகுப்பில் பங்கேற்பது சிரமத்தை ஏற்படுத்தும். ஒன்றுக்கு மேலான தொலைபேசி இருக்கவோ லேப்டாப் இருக்கவோ வாய்ப்பில்லை. இது ஏழை எளிய மாணவர்கள் படிக்கக்கூடிய கல்வி நிலையம் போதுமான இணைய வசதி இருக்காது, கூகுள் மீட், ஜூம் அப்ளிகேஷன் மூலமாக பாடம் எடுத்தால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் மாணவர்கள் படிக்க முடியும். என்று பல்வேறு இன்னல்களை மாணவர்கள் சந்திக்க நேரிடும் இதற்கு தீர்வாகவே.


எங்கள் பள்ளியின் உடைய இந்த அப்ளிகேஷன் இருக்கிறது.இதில் மாணவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று தங்கள் பாடங்களைப் படித்துக் கொள்ளலாம். இதற்கு பெரிய அளவில் இணையம் செலவாகாது வெறும் 5 mp இருந்தாலே போதும் ஒரு பாடத்தைப் படிக்க. ஒரு நாள் முழுக்க உபயோகித்தாலும் 50 mp க்கு மேல் செலவாகாது.
மேலும் எந்தெந்த மாணவர்கள் இதை படிக்கிறார்கள், எந்தெந்த மாணவர்கள் முழுமையாக வீடியோவை பார்த்து கற்றிருக்கிறார்கள் என்ற முழு விபரமும் எனக்கு வந்துவிடும். ஆனாலும் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமல்ல, அப்படி இருந்தும் தினமும் 60 விழுக்காடு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்

பள்ளியின் தலைமையாசிரியர் கிவர்கிஸ் மேத்யூ

அதே நேரத்தில் மாணவர்களின் வீட்டுக்கு சென்று பாடங்கள் குறித்த ஐயப்பாடுகளை தீர்க்கும் பள்ளியின் இந்த செயல்பாடு திருச்சியில் முன்னோடி செயலாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் கிவர்கிஸ் மேத்யூடன் பேசுகையில், பொன்னையா பள்ளி 92 வருடங்களை கடந்து இருக்கக்கூடிய பாரம்பரிய பள்ளியாகும். பள்ளியில்1 முதல் 12ம் வகுப்பு வரை 2300 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
மேலும் எங்கள் பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி, எங்களுக்கு லாபம் ஈட்டுவது நோக்கமல்ல மாணவர்களுக்கு கல்வியை கொடுப்பதே எங்களுடைய நோக்கம். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கொடுக்காமல் இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கின்றோம். மாணவர்களின் இல்லம் தேடிச் சென்று அவருடைய கருத்துக்களை கேட்கின்றோம். பெற்றோர்களுடைய ஆலோசனைகளைப் கேட்கின்றோம் இதன் மூலம் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கல்வியை கொடுக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்லாது சென்ற கல்வியாண்டு எங்களது பள்ளி விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது, கேரம் போட்டியில் மாநில அளவில்ென எங்கள் பள்ளி மாணவர்கள் வென்று இருக்கின்றனர். தேசிய அளவிலான போட்டிகளிலும் எங்களுடைய பள்ளி மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

தற்போது டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவது மற்ற ன்ன்கிடையாது. மேலும் பள்ளி தொடங்கிய பிறகு எங்களால் முடிந்தவரை முதலிலிருந்தே பாடங்களை நடத்துவோம். மேலும் மாணவர்கள் வீட்டுக்கு விசிட் செல்வது மாணவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே. என்று கூறினார்.


இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில் எங்களுடைய பள்ளி எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. எங்கள் சந்தேகங்களை வீடு தேடி வந்த ஆசிரியர்கள் தீர்த்து வைக்கின்றனர். மேலும் அறிவுரைகளை வழங்குகின்றனர். இதற்காக எனது தலைமையாசிரியருக்கு எனது பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில்:- பொன்னையா மேல்நிலைப்பள்ளி எப்பொழுதுமே சிறப்புக்குரிய பள்ளியாக உள்ளது. தலைமையாசிரியரே மாணவர்களை வீடு தேடி வந்து சந்தித்து சந்தேகங்களைத் தீர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தலைமையாசிரியர் வரும்பொழுது முக கவசம் அணிந்து, மருத்துவ வழிமுறைகள் எல்லாம் பின்பற்றி வருகிறார்கள். மேலும் எங்களையும் மருத்துவ வழிமுறைகளை பின்பற்ற கூறுகிறார்கள். இதுபோன்ற இவர்களுடைய செயல்பாடுகள் என்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை இவர்கள் நல்லபடியாக அமைத்து தருவார்கள் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. என்று கூறினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.