மன்னர் மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளி !

இயற்கையோடு கூடிய கல்வியை வழங்கும்

0
D1

1999ஆம் ஆண்டு இராஜஇராஜ கோபால தொண்டைமான் இப்பள்ளியை துவங்கினார். இப்பள்ளி வெறும் கட்டிடங்களாக மட்டுமின்றி இயற்கையான சூழலுடன் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்த அவா் பள்ளியை சுற்றிலும் மரங்களின் ஆதிக்கம் அதிகாக உள்ள வடிவமைப்பை ஏற்படுத்தினார். தற்போது அப்பள்ளியின் தாளாளராக ராணி சாருபாலா தொண்டைமான் நிர்வகித்து வருகிறார்.

புதுக்கோடை அரண்மைக்கு உள்ளேயே இப்பள்ளி இயங்கி வருகிறது. அவர் அமைத்த அதே இயற்கை சூழலோடு இன்றுவரை ராணி சாருபாலா அதனை பாதுகாத்து வருகிறார் குறிப்பாக இன்றை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பறவைகளுக்கு இன்றைய அடைக்கலம் என்றால் அது மன்னர் கல்லூரி வளாகம் தான்.

N2

பறவைகளுக்கு மட்டும் அல்ல அங்கு பயிலும் பள்ளிமாணவர்களுக்கும் இயங்கையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி கல்வியை வழங்குகின்றனர். மாணவர்களுக்கு தேவையான எல்லா ஆய்வக வசதிகள், கழிப்பிடவசதிகள், சுகாதார வசதிகளை முறையாக பராமரித்து வருகின்றனர். அதோடு மாணவர்களுக்கான தற்காப்பு பயிற்சிகள், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

D2

டிஜிட்டல் வகுப்பு முறையில் ஒளி,ஒலி அமைப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுதரப்படுகிறது. விளையாட்டிற்க்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு சிறந்த வீரா்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் தோட்டம் அமைத்தல், இயற்கை உரம் தயாரித்தல், பசுமை குடிலில் உள்ள செடிகளை பராமரித்தல் போன்ற வேலைகளை தன்னார்வத்தோடு செய்து வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.