மணப்பாறையில் அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள ஆசாத்ரோடு, அப்பனம்பட்டியைச் சோ்ந்த கிஷோா்சைமன் (20). வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக மணப்பாறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததகன் அடிப்படையில் கடந்த 8ம் தேதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா ரோந்து சென்றபோது ட்ராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கி வந்த கிஷோா் சைமனை மடக்கி பிடித்து, அவரை கைது செய்து வழக்கு பதிந்ததுடன். அவரிடமிருந்த ட்ராக்டரை பறிமுதல் செய்தனா்.
