திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

0
1 full

திருச்சி அண்ணாசிலை பூசாரித் தெருவைச் சோ்ந்த  நாகரத்தினம் (65). இவா் கடந்த 7ம் தேதி சமயபுரம் அருகே கூத்தூாில் வசிக்கும் தனது மகனைப் பாா்த்து விட்டு, இரவு வீட்டுக்குச் செல்ல சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினர் அவரை  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

3 half

Leave A Reply

Your email address will not be published.