கின்னஸில் இடம்பெறுவது தான் எனது ஆசை

0
full

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு, இலட்சியம், என்று பல கனவுகளோடு வாழ்வது என்பது இயல்பானது தான். ஆனால் அதில் ஒருசிலர் மட்டுமே அந்த கனவுகளுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.

அதிலும் பெண்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்க பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து செல்ல வேண்டி உள்ளது. அப்படிபட்ட கனவுகளோடு வாழும் மாணவி ஜோதியின் இலக்கு தொடர் ஓட்டத்தில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும். தொடர் ஓட்டம் என்பது 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்து உலக அளவில் ஒரு முறையாவது போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது தான். இந்த முயற்சியில் வெற்றி பெற நம்ம திருச்சி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

கரூர் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமம் லாரி ஓட்டுநராக பணியாற்றும் ராஜாலிங்கம் என்பவரின் மகள் ஜோதி. தற்போது திருச்சி தூய வளனார் கல்லுரியில் இறுதி ஆண்டு இளங்கலை பொருளாதாரம் படித்து வருகிறார். முசிறியில் உள்ள அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை துவங்கியதோடு, தன்னுடைய இலக்கு எது என்று முடிவு செய்து. பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்த பாரதி மற்றும் பத்மாவதி மூலம் ஓட்ட பந்தயங்களில் தன்னுடைய திறமையை வெளிபடுத்தியுள்ளார். இந்த ஓட்டம் இன்றுவரை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் ஜோதியிடம் பேசியபோது…

poster

நான் எந்த இலக்கை அடைய வேண்டும் என்பதை பள்ளியிலேயே முடிவு செய்துள்ளேன். எனவே என்னுடைய ஓட்டமும் அதுவாகவே இருந்து வருகிறது. விளையாட்டில் கின்னஸ் சாதனை புரிய வேண்டும். அதோடு உலக அளவிலான தொடர் ஓட்ட போட்டிகளில் பங்கேற்க என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து வருகிறேன்.

ukr

இந்த நேரத்தில் நான் என்னுடைய பயிற்சியாளரான ராஜாமணி மற்றும் தூய வளனார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் பிரேம் எட்வின் உள்ளிட்டவா்களை சொல்லியே ஆக வேண்டும். அவா்களுடைய பயிற்சி தான் மாவட்ட அளவில் மட்டும் பங்குபெற்ற எனக்கு மாநில அளவில் பங்குபெற வாய்ப்பு வந்தது.

முதன் முதலாக 2015ல் நடைபெற்ற தேசிய அளவிலான 5000மீ தொடர் ஓட்டத்தில் 1 தங்கமும், 2 வெண்கலபதக்கமும் பெற்றேன். அடுத்தடுத்து ஹைதராபாத், பெங்களுர், கோவை, போன்ற இடங்களில் நடைபெறற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும், தங்கமும், வெண்கலமும் பெற்று வந்தேன். அடுத்ததாக 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி மதுரையில் நடைபெற்றது.

அதில் 5000மீ ஓட்டத்தில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றேன். 2016ல் இந்திய அளவில் பஞ்சாப்பில் நடைபெற்ற ஓட்டபந்தய போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்றேன். என்னுடைய .இலக்கு தொடர் ஓட்டத்தில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க வேண்டும்.
காலை மாலை என 8 மணி நேரம் என்னுடைய பயிற்சி தொடர்கிறது.

குறிப்பாக நான் ஆண் வீரா்களிடம் தான் என்னுடைய பயிற்சியையும், போட்டியையும் மேற்கொள்வேன் எனவே புதிய அனுபவமும், புதிய பயிற்சியும் எனக்கு கிடைத்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய குடும்ப பின்னனி என்னால் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெற்றி இலக்கை நோக்கி நான் பயணித்து கொண்டே இருப்பேன் என்று கூறுகிறார்.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

half 1

Leave A Reply

Your email address will not be published.