உங்கள் குழந்தை எழுதப்படிக்க சிரமப்படுகிறதா?

‘எங்களிடம் வாங்க’ என அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

0
full

Inline image 1Inline image 3Inline image 2‘வகுப்புகள் மாறினாலும் உங்கள் குழந்தையால், எழுதப் படிக்க முடியவில்லையா. எங்கள் பள்ளிக்கு வாருங்கள் மாற்றிக்காட்டுகிறோம் என்கிறார் திருச்சி அரசுப்பள்ளி ஆசிரியர்.

திருச்சி -நாமக்கல் செல்லும் சாலையில் மேக்கல்நாயக்கன்பட்டியை அடுத்துள்ளது எம்.களத்தூர் கிராமம்,. பேருந்து வசதி குறைவுதான். ஆனாலும், இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், குழந்தைகள், எம்.களத்தூர் தொடக்கப்பள்ளிக்கு வருகின்றார்கள். அரசுப்பள்ளியில் அப்படி என்னதான் செய்கிறார்கள்.

ஆசிரியர் குருமூர்த்தியிடம் பேசினோம்.
“தங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கோபப்படுகிறார்கள், அதோடு பிள்ளைகளின் படிப்பில் ஆசிரியருக்கும் பெரும் பங்கு உள்ளது. மாணவர் ஒருவருக்கு பாடம் புரியவில்லை என்றால் நடத்தும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படித்தான் நான்.
4வருடங்களுக்கு முன்பு ஒருநாள் வகுப்பறையில், சென்னையைப் பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தேன். பாடம், சென்னை மெரினா கடற்கரை குறித்து இருந்தது. சட்டென மாணவர்கள், நாங்கள் யாருமே மெரினா பீச் போனது இல்லை என்றனர். அடுத்த நாள் யூ டியூப் மூலமாக சென்னையில் புகழ்பெற்ற இடங்களை வீடியோவில் காட்டினேன். மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள். அப்போதுதான் மாணவர்களின் பாடங்களை வீடியோக்களாக உருவாக்கலாமே என்கிற எண்ணம் உருவானது.

poster

அதனை அடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், இரவு 7 முதல் 12 மணி வரை தினந்தோறும் ஐந்து மணி நேரம் செலவிட்டேன். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அனைத்து பாடங்களும் வீடியோ படங்களாக தயார் செய்தோம்.

இந்த முயற்சியை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன்.. அதனை பார்த்த வெளிநாட்டில் இருக்கும் எனது நண்பர் முத்துகுமார் ஒருநாள் போன் செய்து அழைத்து, வீடியோ படங்களைத் திரையிட உதவுகிறேன் என்று கூறியவர், 32 இன்ச் எல்.இ.டி டிவி வாங்கித்தந்தார். அதேபோல் சென்னையில் வசிக்கும் எனது சகோதரர் மற்றும் நண்பர்கள் அளிக்கும் நிதியின் மூலம் மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை, வாங்கினோம். தற்போது 32 இன்ச் எல்ஈடி மட்டுமல்ல, ஸ்பீக்கர், மைக் ஆகியவை பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளன.

ukr

காட்சிகள் வழியே விரைவாக கற்றுக்கொள்வதுடன், சந்தேகமின்றி கற்கின்றனர். மேலும், டிவி பார்ப்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. அதை பாடம் நடத்துவதற்கு பயன்படுத்தும்போது, வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இப்படி பாடம் நடத்துவது மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் இது மட்டுமே கற்பித்தலுக்கான சரியான வழி என்று கூறவில்லை. எங்கள் பள்ளியின் மாணவர்களின் இயல்பின் அடிப்படையில் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தேன். அதோடு பள்ளியில் அருமையான நூலகமும் இசைக்கருவிகளையும் சிறப்பாக பராமரித்து வருகிறோம். அக்கரையுள்ள ஆசிரியர்களால் எங்கள் முயற்சி சிறப்பாக நடக்கிறது.

நான் உருவாக்கி வைத்திருக்கும் வீடியோக்களை கல்வித் துறை சார்ந்தவர்கள் பார்த்துவிட்டு, பாராட்டும்போது மகிழ்ச்சியோடு பெருமையும் சேர்ந்துகொள்கிறது. இவை எல்லாம் பல நண்பர்களின் உதவியால் நடந்தது. அவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
பள்ளி சேர்க்கைக்கு பெரிய அளவில் ப்ளக்ஸ் தயார் செய்து, மேக்கல்நாயக்கன்பட்டியில் வைத்திருந்தேன். அதை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்த சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்புகொண்டார். விவரங்களைக் கேட்டார். நான், எங்கள் பள்ளியில் கற்பிக்கும் முறைகளைப் பற்றி விளக்கமாக கூறினேன். ஓரிரு நாள்கள் கழித்து மனைவி, மகன்கள் ஆகியோருடன் பள்ளிக்கே வந்துவிட்டார்.

அவரின் மூத்த மகன், சேலம் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். ஆனால் A,B,C,D தவிர சொற்களைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை. அதிலும் தமிழில் எழுத்துகளும் முழுமையாகத் தெரியவில்லை. அவனிடம் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, எங்கள் பள்ளியில் படித்தால் மூன்றே மாதங்களில் நன்றாக எழுதவும் படிக்கவும் செய்வான். அதற்கு நான் உறுதி ஆனால் நீங்கள் வெளியூர் என்பதால் அங்கிருந்து வரமுடியாதே என்றேன். அவரும் ஆமாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் அடுத்த நாளே எங்கள் பள்ளியில்தான் அவரின் இரண்டு பிள்ளைகளைச் சேர்க்கப்போகிறேன் என்றார். இந்த கிராமத்திலேயே வாடகை வீட்டில் தங்கி படிக்க வைக்கப்போகிறாராம். எங்கள் பள்ளியை நம்பி இவ்வளவு தூரம் அவர் வருவதில் எங்களுக்கு பெருமைதான் என்றார் .

– உமாராணி பச்சமுத்து

இந்த கட்டுரை 2019 நம்ம திருச்சி மே மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது

half 1

Leave A Reply

Your email address will not be published.