5000 பிணங்களை எரித்திருக்கிறேன் – திருச்சி ஆரோக்கியமேரியின் அதிரடி

ஆரோக்கியமேரியின் அதிரடி

0
1

5000 பிணங்கள் எரித்திருக்கிறேன் – திருச்சி ஆரோக்கியமேரியின் அதிரடி

எல்லோருக்குமான பொதுவான இடம் மயானம் எவ்வளவும் பெரிய மனிதராக இருந்தாலும் எங்க கட்டுபாட்டுல வந்து தான் ஆகனும் என்ற புன்னகை கலந்த வரிகளோடு பேச துவங்கினார் ஆரோக்கியமேரி. மயானத்துக்கும் ஆரோக்கிய மேரிக்கும் என்ன சம்மந்தம் என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம்

2

என் திருச்சி இதழுக்கா  நம்மிடம் பேசியது அப்படியே…

எனக்கு பொன்மலைப்பட்டி தான் சொந்த ஊரு. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய கணவா் தவில் வாசிப்பவா், ஆனால் எங்கள் இருவருக்கும் பொதுவான வேலை மாவடிக்குளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் தான். என் மாமனார் செய்து வந்த தொழில் அவருக்கு பின் நாங்கள் தற்போது செய்து வருகிறோம்.பொதுவா மயானத்துக்கு பெண்கள் வருவது தவிர்க்கப்பட்ட காலம்மாறி இன்று மயானத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஒரு பிணம் வந்தால் அதற்க்கு செய்ய வேண்டிய எல்லா ஈமசடங்குகளையும் செய்துவிடுவேன்.

முதலில் இதை செய்வதற்க்கு கொஞ்சம் பயமாகவும், அறுவறுப்பாகவும் இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அது பழகிவிட்டது.

30 வருடங்களில் 5000ஆயிரத்திற்க்கும் அதிகமான பிணங்களை நான் எரித்துள்ளேன். கல்யாணம் ஆன புதுசுல என் கணவரோட சோ்ந்து கொஞ்சம் ஒத்தாசையா இருப்பேன். என்னால் செய்ய முடிந்த வேலையை செய்துவிட்டு உடனே வீட்டிற்க்கு வந்துவிடுவேன்.

4

ஆன எனக்கு வந்த சோதனை என் கணவா் தவில் வாசிக்க ஒரு நிகழ்ச்சிக்கு போய்டாரு ஒரு 25 வயசு இருக்கும் அந்த பொண்ணுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டானு சொல்லி மயானத்துக்கு எடுத்துட்டு வந்தாங்க. இறுதி சடங்கு செய்யனும் சொல்லி என்கிட்ட வந்து பேசுனாங்கள ஆனா நான் முதலில் முடியாது என்ற மனநிலையில் இருந்தேன்.

ஆன வேற வழி இல்லாம சரினு போயி எல்லா சடங்குகளையும் செய்துவிட்டு வந்தேன். அது தான் எனக்கு முதல் அனுபவம் தனி ஆளா இருந்து செய்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. ஆனா இப்ப அது பழகி போச்சு என்றார்.

பொதுவா பிணம் எரிக்கும் போது பிணம் எழுந்து நிற்க்கும்னு சொல்லுவாங்க அது எழுந்து நிற்காது பிணத்தை எரிக்கும் முன்பு அதன் கைகளை முதுகு புறமாக மடக்கி கட்டிவிடுவோம். அதை கட்டாமல் இருந்தால் இரண்டு கைகளும் மேலே உயரும் அதுதான் பிணம் எழுவது போன்று இருக்கும். ஒரு பிணம் எரிய குறைந்தது. 2 முதல் 3 மணி நேரம் ஆகும் ஒருசில பெரிய அளவிலான உடல்களுக்கு நேரம் கூடுதலாக ஆகும்.

இந்த தொழிலுக்கு மிக முக்கியம் விறகு, வரட்டி, இதெல்லாம் இந்த காலத்தில் கிடைப்பதில் சிரமமா இருக்கு. திருச்சிக்குள்ள ஏதோ ஒருசில கிராமங்களில் மட்டும் தான் வரட்டி செய்றாங்க. அதனால் மொத்தமா காசு கொடுத்து வாங்கி வச்சுக்குவோம். 25 கிலோ உள்ள வரட்டி 1100 முதல் 1200 வரை விலை சொல்லுவாங்க. சாதாரணமா ஒரு பிணத்தை எரிக்க 500 வரட்டி தேவைப்படும்.

மழை காலங்களில் அதைவிட சற்று எண்ணிக்கையும் கூடும். இருந்தாலும் நாங்க மயானத்துக்கு வரும் உறவினா்களிடம் அதிகளவில் பணம் வாங்க மாட்டோம். கொஞ்சம் வசதியான ஆட்களாக இருந்தா 5ஆயிரம் ரூபாய் வங்குவோம். கஷ்டபடுற குடும்பமாக இருந்தால் 3ஆயிரம் ரூபாய்க்கு குறைவா வாங்குவோம். எல்லா நாட்களிலும் இப்படி வருமானம் வரும்னு சொல்ல முடியாது 15 நாட்களுக்கு ஒருமுறைகூட பிணம் வரும் ஒரு மாசம் வராமல் கூட இருக்கும் இதெல்லாத்தையும் சமாளிச்சு குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

ஒருபுறம் குறைவான வருமானம் இருந்தாலம் மனசுக்கு நிறைவா இருக்கு. நாளைக்கு நானும் இந்த வரட்டி, விறகு கட்டைகளால் தான் எரிய போரேன் அதனால என்னாள எந்த அளவுக்கு நிறைவா இந்த பணியை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்றேன். எங்களுக்கு ஒரு நிரந்தர வருமானம் இருந்த இன்னும் நல்லா இருக்கும் அரசு சார்பில் உதவிகள் செஞ்சா நல்லா இருக்கும் என்றகிற ஆதங்கத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். பெண்கள் இல்லாத இடம் ஏது என்கிற நிலை உருவாகி வருவதை நம் கண்கூடாக காண முடிகிறது ஆரோக்கியமேரியின் வாழ்கை.

 

3

Leave A Reply

Your email address will not be published.