பிடித்த தொழிலை செய்தேன்… ஜெயித்தேன்…

0
D1

இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஹாயாக வந்து போன இடங்கள் திருச்சியில் ஏராளமாக உள்ளது. அப்படி நிறைய ஸ்டார்களுக்கு மட்டுமல்லாமல் எல்லொருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் கடை உண்டு என்றால் நம்ம மைக்கேல்ஸ் ஸ்கிரீம்தான். திருச்சியில் பல சிறப்பம்சம் இருந்தாலும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஒரு தனிசுவைதான் ! அந்த சுவைக்காக, எப்போதும் பள்ளி மாணவர்கள், முதல் காலேஜ் யூத்ஸ் என கூட்டம் குவியும்.

திருச்சி தலைமை தபால் நிலையம், மெயின்காட் கேட் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் காணப்பட்டாலும் ஐஸ்கிரீம் ருசி ஒன்றாகவே இருக்கும்.

திருச்சி நல்லி சில்க்ஸ் அருகே உள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில் இருந்த ஜூலியட் வளர்மதியைச் சந்தித்தோம்.

D2

நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பிடித்த வேலை இதுதான். அதனால் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். இப்போது நல்லபடியாக போகுகிறது. பலருக்கு வேலைக்கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். ஒருகாலத்தில் பேக்கரி தொழில்தான் என முடிவெடுத்த பிறகு, வேலையை உதறிவிட்டு, தயக்கமில்லாமல், தொழிலில் இறங்கினேன். இப்போ, உழைப்பதுக்கு ஏற்ற லாபம் கிடைப்பதுபோல், தொழிலில் பெயர் வாங்கியுள்ளேன்.

”நான் பிறந்து வளர்ந்தது சென்னை. அப்பாம்மா ஆசிரியர்கள். அதனால் பெண் பிள்ளைகளுக்கு தேவையான சுதந்திரம், தைரியம் கொடுத்தார்கள். அந்தச் சுதந்திரம், எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. தடகள போட்டிகளில், தேசிய அளவில் பதக்கமும், சமூக சேவைக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்கும் அளவுக்கு கொண்டுபோனது. ”சென்னை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி முடிச்சுட்டு, திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரன்டீஸிப் முடித்தேன். அடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டா வேலை கிடைத்தது.

N2

இந்நிலையில்தான் இந்த ஊரைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை கல்யாணம் முடித்தேன். கல்யாணம் முடித்த கையேடு, பி.இ. அடுத்து எம்.இ. முடித்தேன். பொறியியல் கல்லூரிகளில், பேராசிரியர் வேலை எல்லாம் கிடைத்தது. ஆனால் மனசு அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

”சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என மனசு சொல்லிக்கொட்டே இருந்தது. அடிக்கடி, என் கணவர் நடத்தி வந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு போய், அவங்களுக்கு உதவி செய்வேன். அந்த வேலை எனக்குப் பிடித்திருந்தது. அதனால் செய்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு, கணவரோட ஐஸ்க்ரீம் பார்லர் பிஸினஸோடு ஒட்டிக்கொண்டேன்.

கணவருக்கு உதவும் சாக்கில், ஒரு கடை நடத்தறதுல இருக்கற கஷ்ட நஷ்டங்கள் எல்லாத்தையும் தெரிந்துகொண்டேன். கூடவே வாடிக்கையாளர்கள் திருப்திதான் இங்கு முக்கியம். அவர்களை திருப்தி படுத்தினால் ஜெயித்துவிடலாம் என உணர்ந்தேன்.

அதனால் தனியா பிஸ்னஸ் பண்ண வேண்டும் என முடிவெடுத்து நானும் என் கணவரும் ஆலோசனையில் இறங்கினோம். ஏதேதோ பிஸ்னஸ் எல்லாம் பேசி தீர்த்து. கடைசியாகத்தான் ‘பேக்கரி’ தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். இந்தத் தொழிலில், இருந்த பலரிடம் ஆலோசனைகள் கேட்டு தெரிந்துகொண்டேன். கூடவே, பேக்கரியை ஆரம்பிக்க பயிற்சி, தேவையான முதலீடு உள்ளிட்டவை சேகரித்துக் கொண்டேன்.

‘இந்தத் தொழிலில், போட்டிகள் அதிகம். ஆனால் பொருள் தரமானதாக இருந்தால், மக்கள் தேடி வருவார்கள் என முடிவு செய்து, கடையைத் திறந்தேன். ”பேக்கரி ஆரம்பித்து 8வருடத்துக்கு மேல் ஆகுது. ஆர்வமும் உழைப்பும் கண்டிப்பா உயர்வைத் தரும். அது எங்களுக்கு கை கொடுத்துள்ளது. மனநிறைவாகத் தினமும் உற்சாகமாக வேலை செய்கிறேன்” என்றார்.
-ஞா.குமரன்

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

N3

Leave A Reply

Your email address will not be published.