லால்குடியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்:

0
Business trichy

லால்குடியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்:

Rashinee album

பொதுமக்களின் நலன்கருதி, ஊரடங்கில் இருந்து பெருமளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. மேலும், முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, லால்குடி சிறுதையூர் ரவுண்டானா பகுதியில் லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி தலைமையில் துப்பரவு ஆய்வாளர் பால்ராஜ். பேரூராட்சி பணியாளர்கள் நின்று பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்று கண்காணித்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.