மராமத்து செய்ய வேண்டிய மனிதநேயம்

0
D1

அதிகாலை 6.14க்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெளியே கண் பார்வையற்ற அப்பாஸ் பிரசவ வேதனையில் துடிக்கும் நிறைமாத கர்பிணியான தன் மனைவி பிரிதாவுடன் மெதுவாக நகர்ந்து கொண்டே ”இங்க பிரசவ வார்டு எங்கே இருக்கு ?” என கேட்டுக்கொண்டே உள்ளே சென்றார்.

அப்போது பிரசவ வார்டில் பணியில் இருந்த அந்த 3 செவிலியர்கள் டூட்டி 7 மணிக்கு முடிய போகுது சீக்கிரம் கிளம்பணும் என்று அவசர அவசரமா எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டே இருந்தார்கள். தட்டுத்தடுமாறி உள்ளே வரும் அப்பாஸ் மற்றும் நிறைமாத கர்பிணியை பார்த்தவுடன் அலட்சியமாக என்னமா இங்கே ! இந்த நேரத்துக்கு வந்து என் உயிரை எடுக்குற என்ன அவசரம் உனக்கு என்று குத்தலாக பேச நர்ஸம்மா எனக்கு வலி தாங்க முடியலம்மா என்னை பெட்ல படுக்க வையுங்கமா என்று பரிதாபமாக பிரிதா கேட்க, உடன் இருந்த அப்பாஸ் அம்மா எனக்கு கண்ணு தெரியாது, எங்களுக்கு வீடு வாசல் கிடையாது நாங்க நாடோடி, ரோட்டுல படம் வரைஞ்சு பிச்சை எடுக்குறவுங்க எங்க மனைவி வலில தூடிக்குது மா ஆஸ்பத்திரியில் சேத்துக்கோங்கமா என்று கையெடுத்து கும்பிட்டார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த 3 நர்ஸில் ஒருவர் யம்மா எனக்கு தெரியாதா உனக்கு இப்ப குழந்தை பிறக்காது, இன்னும் கொஞ்ச நாள் ஆகும், இங்க சேக்கணுன்னா பணம் செலவாகும் உன் கிட்ட இருக்கா? இங்கே ரெகுலரா வந்து சிகிச்சை எடுத்தா தான் நாங்க பாக்க முடியும், இதை ஆப்ரேசன் பண்ணி தான் எடுக்க முடியும். நீ வேணும்னா திருச்சி அரசு மருத்துவமனைக்கு போ அங்க தான் உனக்கு சிகிச்சை கொடுக்க முடியும் என்று தட்டி கழித்துக்கொண்டே டூட்டி முடியிற நேரத்துல வந்து எங்க உயிர எடுக்காதே பேசாம போயிட்டு அப்புறம் வா, என்று சொல்லிக்கொண்டே எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோகாரனை கூப்பிட்டு அவன் கையில் 100 ரூபாயை திணித்து இவுங்கள அவுங்க எங்க சொல்றாங்களோ அங்கே இறக்கிவிட்டு வா. இப்ப அட்மிஷன் போட்டா எங்க வேலை கெட்டு போயிடும் என்று அவசர அவசரமா ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி வைத்தனர்.

D2

அரசு ஆஸ்பத்திரிதான் ஒரே நம்பிக்கை என்று வந்த அப்பாஸ் வலியில் துடித்துக்கொண்டிருந்த மனைவியோடு வேறு வழி தெரியாமல் அழுதுக்கொண்டே இருந்தார். ஆட்டோக்காரனோ இது என்னடா உங்களோட ரோதனையா போச்சு.. உங்கள எங்க இறக்கிவிடன்னு சொல்லுங்க என்று அதட்டலாக கேட்க, அய்யா அந்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கிற ஆஞ்சநேயர் கோவில்ல தான் தங்கியிருக்கோம். அங்க எங்க சொந்தகாரவுங்க எல்லாம் இருக்காங்க அங்கயே இறக்கிவிடுங்க என்று சொல்ல ஆட்டோகாரனும் நர்ஸ் குடுத்த காசுக்கு விசுவாசமாக ஆஞ்சநேயர் கோவில் வாசலில் இறக்கிவிட்டார்.

தட்டுதடுமாறி ஆட்டோவை விட்டு கீழே இறங்கின பிரிதா அதற்கு மேல் நடக்கமுடியாமல் அப்படியே தரையில் படுத்தார். இறக்கிவிட்டால் போதும் என அங்கிருந்து சிட்டாக பறந்தார் ஆட்டோகாரர்.

கீழே படுத்த தன் மனைவிக்கு பாதுகாப்பாக கண் பார்வையற்ற அப்பாஸ் மறைத்து நின்று கொண்டே கொஞ்ச பொறுத்துக்கோமா! கடவுள் இருக்காரு எப்படியும் நம்மை காப்பாத்துவாரு என்று தன் மனைவியை அன்போடு ஆவிசுவாசப்படுத்திக்கொண்டே இருந்தார். வலியும் வேதனையும் ஒன்றாக சேர்ந்து பிரசவ வலியால் விண்ணை பிளக்கும் அளவுக்கு பிரிதாவின் அலறல் அங்கே சற்று தூரம் நின்று கொண்டு இருந்த மனிதாபிமானிகளின் காதுகளில் ஓங்கி ஒலித்தது. அதே வேளையில் மெல்லிய அழுகையுடன் குழந்தை வெளியே வருவதை உணர்ந்த பிரிதா வலியை பொறுத்துக்கொண்டு ஏங்க…

N2

குழந்தை வெளியே வருது அதை பிடிங்க என்று கண்பார்வையற்ற அப்பாஸிடம் சொல்ல.. செய்வதறியமால் திகைத்து நின்று கொண்டு இருந்த அப்பாஸ் மெதுவாக கையைகளை தடவி பார்க்க கைகளில் பாதி குழந்தை தட்டுபடுவதை உணர்ந்த அவர் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தன் அலறல்களுக்கு நடுவே மெல்லிய குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பிரிதா அப்படியே அழுது அழுது மயங்கி கிடந்தார்.

தந்தை, தாய், குழந்தையின் அலறல் சத்ததை கேட்ட பொதுஜனம் 108 ஆம்புலென்சுக்கு தகவல் கொடுக்க அதே நேரம் அந்த பகுதியில் வேறு ஒரு பணிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் லோகேஷ், அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சுடன் விரைந்தனர்.

அவர்கள் இறங்கும் போது கையில் பாதி குழந்தையுடன் அப்பாஸ் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் சிகிச்சை அளித்து குழந்தையை முழுவதுமாக வெளியில் எடுத்தார் . அதே மருத்துவமனைக்கு காலை 7.45 க்கு கொண்டு வந்து சேர்த்தார். அதே அறையில் அந்த 3 நர்ஸசுகளும் குற்றணர்வுடன் அவர்களுக்கு பணிவிடை செய்தனர்.

சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். அவர்கள் குடும்பத்தினர் நாடோடி ஒவ்வொரு ஊராக சுற்றி தெருவோரத்தில் படங்கள் வரைந்து அதற்கு வர்ணம் தீட்டி பிச்சை எடுத்து தன் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டு இருப்பவர். நாம் முதலில் இங்கே வந்த போது தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனை மறுத்ததால் உடனே அங்கிருந்து தன் மனைவியை அழைத்து கொண்டு ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்து சென்று விட்டார். அந்த பகுதி மக்கள்,மனிதநேயம் உள்ள மருத்துவர்கள் என அந்த குழந்தைக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பண உதவி செய்தனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணி பெண்களை மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பணிமுடியும் 7.00 மணிக்கு முன்னதாக வரும் யாரையும் சிகிச்சைக்கு அனுமதிப்பதே இல்லை தட்டிக்கழித்து வெளியே தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் தான் பரிதா சாலையோரம் பிள்ளை பெற்றெடுக்க தள்ளப்பட்டார். எந்த பெண்ணுக்கும் இனி இது போன்ற நிலை வரக்கூடாது.

பெண்மையை போற்றும் நாம் இன்னும் நம்முடைய மனிதநேயம் பழுதடைந்து விட்டதோ என்கிற சந்தேகம் பிரிதா சம்பவத்தை நினைக்கும் போது ஏற்படுகிறது. இது மனிதநேயத்திற்கு மராமத்து செய்யவேண்டி நிலை வந்து விட்டதையே காட்டுகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.