பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை முதல் செயல்படும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்:

பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை முதல் செயல்படும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்:
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாஸ்போர்ட் சேவை மையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கரூர், பெரம்பலூர், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை செப்.9 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ஆன்லைன் மூலம் முன்கூட்டியே நேர அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். மேலும், சேவை மையத்துக்கு வரும் அனைத்து விண்ணப்பத்தாரர்களும் தங்களது செல்போனில் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இதேபோல, விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்ப்பதற்காக நாள்தோறும் காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற விரும்புவோர் 75985 07203 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணிக்குள் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800-258-1800 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, 0431-2707203, 2707404 என்ற எண்ணிலோ அல்லது 7598507203 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது rpo.trichy@mea.gov.in என்ற இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
