பணத்திற்காக வாலிபரை கடத்திய திருச்சியை சேர்ந்த கும்பல் சிக்கியது:

0
Full Page

பணத்திற்காக வாலிபரை கடத்திய திருச்சியை சேர்ந்த கும்பல் சிக்கியது:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது மகன் வினோத்குமார் (வயது 31). . இவருக்கும், திருச்சி காஜாமலையை சேர்ந்த நசீர் அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா (20) என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

Half page

இந்த பெண்ணை பார்ப்பதற்காக சொகுசு மோட்டார் சைக்கிளில் வினோத்குமார் கடந்த 5-ந் தேதி திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே காத்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் அங்கு வந்து, வினோத்குமாரை குண்டுகட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.

பின்னர்,  ரூ.1 லட்சம் இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையேல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவரிடம் பணம் இல்லாததால்   அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் அவரை விட்டுசென்றனர்.

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காஜாமலையை சேர்ந்த இளம் பெண்ணான ரகமத்நிஷாவை 7 பேர் கும்பல் முகநூல் மூலம் ஆபாசமாக பேச வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரகமத்நிஷா, கூட்டாளிகள் திருச்சி மதுரைரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் முகமது யாசர்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.