திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் உறியடி உற்சவம்:

0
Business trichy

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் உறியடி உற்சவம்:

Full Page

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா வருகிற 10ந்தேதியும், உறியடி உற்சவம் 11ந் தேதியும் நடைபெறுகிறது. கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின் முதன் நாளான 10ந் தேதி மூலவர் ரெங்கநாதர் விஸ்வரூப  சேவை காலை 6.30 மணி முதல் 7.30மணி வரையும். பொது ஜனசேவை காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மேல் மூலவர் ரெங்கநாதர் சேவை கிடையாது2ம் நாளான 11ந் தேதி விஸ்வரூப சேவை கிடையாது.

மூலவர் ரெங்கநாதரை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மாலை 5.30 மணிக்கு மேல் மூலவர் ரெங்கநாதர் சேவை கிடையாது. மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Half page

Leave A Reply

Your email address will not be published.