திருச்சி மணிகண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

0
Business trichy

திருச்சி மணிகண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

Full Page

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை (65). இவர் அளுந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது மொபைட்டில் வேலைக்கு சென்ற சங்கப்பிள்ளை இரவு பணியை முடித்துக்கொண்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலம்பட்டி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக மொபட்டை நிறுத்திவிட்டு அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது ஆலம்பட்டியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் குழந்தைராஜ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சங்கப்பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்து விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.