திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது

கரூர் மாவட்டத்தில் இருந்து ஜல்லிக் கற்கள் ஏற்றிக்கொண்டு திருவாரூர் நோக்கி நேற்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி-சென்னை பைபாஸ் சாலை பழைய பால் பண்ணை அருகே அந்த லாரி சென்றபோது, திடீரென என்ஜினில் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே தோகைமலையை, சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ் (28) லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் லாரியில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
