திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா போராட்டம் :


திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா போராட்டம் :
தமிழக அரசு விவசாயிகளுக்கான இலவச விவசாய மின் இணைப்பு முடக்க பார்க்கிறது. 2020ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய இலவச விவசாய மின் இணைப்பு 100% வழங்கப்படவில்லை. மேலும் ஒரு ஹெச்பி மின்சக்திக்கு ரூ.20000 கட்டினால் வழங்கப்படும் என அறிவித்தும் தட்கல் திட்டத்தை அறிவித்தும் இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தை முடக்க பார்க்கிறது. 1980 முதல் 1989 வரை தொடர்ந்து போராட்டம் நடத்தி பல லட்சம் பேர் சிறை சென்று 63 விவசாயிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி பெற்ற உரிமைதான் இலவச விவசாய மின் இணைப்பு என்பதை முதல்வர் உணர வேண்டும். வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
