திருச்சி கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலய தேர் பவனி

0
D1

திருச்சி கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலய தேர் பவனி

N2

திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு மாநில இளைஞர் பணிக்குழு செயலாளர் மார்ட்டின் ஜோசப் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

காலை 7 மணிக்கு, கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டி நற்கருணை ஆராதனையும், மாலை 6 மணிக்கு பிராட்டியூர் புனித மான்போர்ட் மாநில தலைமையகத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஜோசப் நற்கருணை ஆசீரும் வழங்கினார். தொடர்ந்து ஆலய வளாகத்தில் குணமளிக்கும் மாதாவின் சோரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி தாளாளர் தாமஸ் ஜூலியன் ஆசீர்வதித்தல் ஆராதனை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஆண்டுதோறும் குணமளிக்கும் மாதாவின் தேர் வீதி, வீதியாக பவனி சென்று திரும்புவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆலய வளாகத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டு மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு திருப்பலிகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 

N3

Leave A Reply

Your email address will not be published.