திருச்சியில் சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி:

0
Full Page

திருச்சியில் சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி:

 

Half page

திருச்சி இ.பி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் அதே பகுதியிலுள்ள ஜான் தோப்பில் வசிக்கும் மணி, பழனிச்சாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 8 பேரிடம் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் சீட்டு சேர்ந்து மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் சீட்டு முடிந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் மணி, பழனிச்சாமி உள்ளிட்ட குடும்பத்தினர் 8 பேரும் அனைவரையும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சுமார் ரூ.24 கோடி வரை ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அங்கு பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.