
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

திருச்சி மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8235 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் நேற்று கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 53 பேர் நேற்று பூரணகுணமடைந்து வீடு திரும்பினர்.
