என் கவிதைகளுக்கு என்றுமே ஊனம் இல்லை

ஹைக்கூ கவிஞர் சேர்தில்

0
D1

உலக அரங்கில் எத்தனையோ கவிதையாளா்களை மேடைகள் அலங்கரித்து உள்ளது. அவனின் படைப்புகள் கொடுக்கும் அங்கீகாரம் சமூகத்தின் அவன் காட்டும் அக்கறை கொண்டு வரும் கவிஞன் என்ற நான்கு எழுத்துக்கள் தான்.

ஊனமில்லா ஹைக்கூ கவிதைகள் என்ற தலைப்பின் நோக்கமே ஒரு மாற்றுதிறனாளியின் படைப்புகள் பற்றிய விரிவான அலசல்…

திருச்சி காட்டூா் பகுதியை சோ்ந்தவா்  சேர்தில் (36) (சிங்கமனசு என்று அர்த்தம்) அவரை நேரில் சந்தித்து பேசுகையில்…

D2

எனக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனா். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சிந்தாமணி அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு பல்வேறு சொந்த தொழில்களை செய்து வந்தேன். கடந்த 2012ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் ஜெய தான் எனக்கு இந்த வேலையை வாங்கி கொடுத்தார். 3 வயதில் இளம்பிள்ளைவாதம் நோயால் பாதிக்கப்பட்டு என்னுடைய கால்கள் நடக்க முடியாத அளவிற்க்கு பாதிக்கப்பட்டது. என்னுடைய அப்பா பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். உடன் பிறந்தவா்கள் மொத்தம் 8 போ் ஒரு வேலை சாப்பாட்டிற்கே வறுமை ஒருபுறம் இருந்தாலும் எல்லோரும் கஷ்டபட்டு வாழ வேண்டும் என்ற கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டோம்.

என்னுடைய குறைபாட்டை நான் என்றுமே குறையாக நினைத்தது இல்லை. சிறுவயது முதல் எனக்கு கவிதையின் மீது ஆா்வம் உண்டு. அதை நாளுக்கு நாள் வளா்த்து கொண்டேன். பள்ளியில் நிறைய கவிதை போட்டிகள் பங்கேற்றுள்ளேன். அது ஒரு தேடுதல் பாதையை அமைத்து கொடுத்தது. உருமு தனலட்சுமி கல்லூரியில் வணிகவியல் துறையில் முதுகலை மற்றும்
எம்.பில் பட்டம் பெற்றேன் என்னுடைய கல்லூரி காலங்களில் என்னுடைய கவிதை ஆா்வத்திற்க்கு உயிர் கொடுத்தவா் தமிழ் பேராசிரியா் மற்றும் தமிழ் துறை தலைவா் வீரமணி.

அவரிடம் இருந்து கவிதை புத்தகங்களை வாங்கி சென்று படித்துவிட்டு திருப்பி கொடுத்துவிடுவேன். அவரிடம் இருந்த எல்லா புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். அவா்தான் என்னுடைய கவிதைகளை நாளிதழ்களில் கடிதம் மூலம் எழுதி அனுப்ப அறிவுரை கூறினார்.

N2

முதல் கவிதை “சொந்த காலில் நிற்கிறான் மாற்று திறனாளி’’ இதை தினதந்திக்கு எழுதி அனுப்பினேன் அவா்கள் எனக்கு முதன்முதலாக ரூ.20 பரிசாக மணிஆா்டா் அனுப்பினார்கள். அதன்பின் பல்வேறு செய்திதாள்கள், வாரஇதழ்கள், என்று தொடர்ந்து என்னுடைய படைப்புகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். என்னுடைய முதல் புத்தகமான “வானம் வசப்படும்’’ என்ற கவிதை புத்தகத்தை 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் ஜெய முரனிதரன் வெளியிட்டு பாராட்டினார்.

எனக்கு ஹைக்கூ கவிதைகள் மீது ஆா்வம் உண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வுகள், பொருட்கள் என்று எதை கூறினாலும் உடனடியாக ஒரு கவிதை சொல்லும் அளவிற்க்கு என்னை நாளுக்கு நாள் வளா்த்து கொண்டு வருகின்றேன். அதன்பின் “பொம்மைகள்+குழந்தைகள் +அம்மாக்கள்=கடவுள்’’, தண்ணீா் அஞ்சலி, சிகரத்தை தொட்ட சிறகுகள், தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள், தொட்டு பார்த்தாய் உள்ளிட்ட 5 புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். இன்னும் என்னிடம் 10 புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அதனை வெளியிட உள்ளேன் என்று தன்னம்பிக்கையோடு கூறினார்.

கவிதையை நான் நேசிப்பதால் என்னுடைய பொருளாதார நிலையை நான் நினைத்தது இல்லை. என்னுடைய கவிதை புத்தகங்களை வெளியிட நண்பா்கள் மூலமாக அவா்கள் கொடுக்கும் தொகையை கொண்டு நான் அச்சிடுவது, வெளியிடுவது போன்ற பணிகளை செய்கிறேன். இரண்டு கால்களும் எனக்கு குறையில்லை நானும் சராசரி மனிதா்கள் போல் நடமாடுகிறேன் என்ற உணா்வை இந்த புத்தகங்கள் எனக்கு கொடுக்கின்றன..

என்னுடைய விடாமுயற்சி தொடரும்…

பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக என்னுடைய பெயரில் தில் என்பதை மட்டும் எடுத்து “தில் பாரதி’’ என்று சோ்த்து கொண்டேன் அந்த பாரதியின் துணிவு எனக்குள் என்றும் இருக்கும்.

உடல் அளவில் தான் நான் ஊனம், என்னுடைய கவிதைகளுக்கு என்றுமே ஊனம் இல்லை.

N3

Leave A Reply

Your email address will not be published.