இல்லத்தரசி தொழில் அதிபர்(கள்)

0
1 full

சொந்தமாக தொழில் துவங்கலான்னு ரொம்ப நாள் ஆசை. அந்த தொழில் புதுசா இருக்கனும் பலமுறை யோசித்து தான் இதை தோ்வு செய்தோம். இப்போது மக்களுக்கு புதிய விசயத்தையும் எங்களுக்கு புதிய அனுபவத்தை இது கொடுக்கிறது என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார்கள் அந்த இல்லத்தரசி தொழில் அதிபா்கள்…

தில்லைநகர் 7வது கிராஸில் உள்ள ஸ்டேச்சு ஸ்டுடியோ. அந்த கடையை போட்டோ எடுக்கும் கடை என்று நினைத்துக் கொண்டு முதல்முறையாக உள்ளே சென்ற நமக்கு ஒருவித அமைதியான சூழல் நிலவுவதை உணர முடிந்தது.

இந்த கடையில அப்படி என்ன விசேஷம் என அந்த கடையின் நிர்வாகிகள் எஸ்.பிரியா மற்றும் ஜி.கே.சுபாஷ்னியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு ஏற்படவே அவர்களிடம் நம்ம திருச்சி இதழுக்காக பேசினோம்.

2 full

முதலில் ஒருவித தயக்கத்துடன் பேச ஆரம்பித்தவர்கள். இந்த கடையின் பெயா் வித்தியாசமாக இருக்கட்டுமே இந்த கடையை பத்தி சொல்லனும்னா திருச்சியில் பல இடங்களில் சிலைகள் விற்பனைக்கு உள்ளது. நாங்க பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே இங்கே விற்பனை செய்கிறோம் .

ஜி.கே.சுபாஷ்னி நம்மிடம்

நாங்க இருவரும் குடும்ப நண்பா்கள் என்பதால் நிறைய பேசுவோம் அப்போ தீடீர்னு இரண்டு பேருக்கும் ஒரு ஐடியா தோணுச்சு ஏன் நாம் தொழில் துவங்க கூடாதுன்னு. இது பெண்களின் உலகம் என்பதால் எங்கள் வீட்டிலும் எந்த தடையும் சொல்லாமல் உடனே சரின்னு சொன்னதே எங்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது.

இயல்பாகவே எங்கள் இருவருக்கும் கலையின் மீது ஆா்வம் உண்டு. நாங்க சென்ற பல ஊர்களில் இதுபோன்ற சிலை வடிவமைப்புகளை பார்த்து உள்ளோம். அது எங்களுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பொதுவாகவே உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகளுக்கு பாசிடிவ் எனா்ஜி இருக்குன்னு முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.
திருச்சியில் இந்த மாதிரி சிலைகளை விற்பனை செய்ய வேண்டும் என தோன்றிது. எங்களிடையே இருந்த சரியான புரிதலால் இந்த தொழிலை தோ்வு செய்தோம்.

எங்கள் இருவருக்குள்ளும் சரியான கட்டுபாடும், குறைகளை சரி செய்துகொள்ளும் பக்குவம் இருப்பதால் எங்களுக்குள் எந்தவித மனவருத்தமும் வந்தது இல்லை. என் பாட்னர் பிரியா பொறியியல் பட்டதாரி, நான் 12ஆம் வகுப்பு தான் படித்துள்ளேன். அவா்களுடைய படிப்பறிவும், என்னுடைய அனுபவ அறிவும் இந்த தொழிலுக்கு போதுமானதாக இருக்கிறது.

கடந்த 2016 அக்டோபா் மாதம் ஆரம்பித்தோம் எங்களுடைய நண்பா்கள் மூலம் வாய்மொழி விளம்பரமாக கொண்டு சென்றது நாளுக்கு நாள் வாடிக்கையாளா்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தது எங்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியது. பொதுவாக கலை மற்றும் சிலைகள் மீதான ஆா்வம் உள்ளவா்கள் மட்டுமே வருவார்கள்.

இந்த தொழிலில் நாங்கள் தினம் தினம் புதிய விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இந்த சிலை தொடா்பான ஒருசில அடிப்படையான தகவல்கள் மட்டுமே தெரியும். ஆனால் எங்களை தேடிவரும் வாடிக்கையாளா்கள் பலர் புதிய வடிவங்கள், புதிய தகவல்களோடு உள்ளே வருவார்கள் அவா்களிடம் இருந்து நாங்கள் அதிகளவில் கற்றுகொண்டுள்ளோம்.

எஸ். பிரியா நம்மிடம்
இந்த சிலைகள் நம்முடைய வீடுகளில் இருக்க வேண்டிய பொருள். சிறந்த பரிசு பொருளாக கூட நாம் அதை நண்பர்களுக்கு நம்மை மறக்ககூடாதவர்களுக்கு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் பரிசாக இந்த சிலைகள் இருக்கும். இந்த சிலைகள் பரிசு அளிப்பதன் மூலம் உங்களை மறக்க முடியாத நபர்களாகவும் மாற வாய்ப்பு இருக்கு. குறிப்பாக வாஸ்து தொடர்பான சிலைகள் இங்கு உள்ளது.

தன்வந்திரி கையில் அட்டைபூச்சியும், அமிர்தகலசமும் இருக்கும் வடிவிலான சிலைகள், புத்தா் சிலைகள், விநாயகா் சிலைகள், விளக்குகள், யானை, என பல்வேறு சிலைகள் வைத்திருக்கிறோம். எங்களிடம் 180 ரூபாய் முதல் 40ஆயிரம் வரையிலான சிலைகள் மற்றும் கலை பொருட்கள் வைத்திருக்கிறோம்.

இந்த சிலைகள் அனைத்தும் வடிவமைக்கப்படுவது உத்தரபிரதேசம், சட்டீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம் தேவைப்படுவா்களுக்கு அவா்களுடைய விருப்பத்தின் பேரில் அவா்கள் விரும்பிய சிலைகளை எங்கிருந்தாலும் வாங்கியும் கொடுப்போம் என்று தன்னம்பிக்கையாக பேசினார்.

முதல்முறை இந்த கடைக்கு வருபவர்கள் மீண்டும் மீண்டும் இங்கே வர வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது அங்கே இருக்கும் சிலைகள். வாய்ப்பு இருந்தாலும் நீங்களுக்கும் சென்று பார்க்கலாமே !
சிலை தொழில் அசத்தும் இல்லத்தரசிகளுக்கு நம்ம திருச்சி இதழ் சார்பாக வாழ்த்துகள் சொல்லி விடைபெற்று வந்தோம்.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

3 half

Leave A Reply

Your email address will not be published.