இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் :

0
gif 1

இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் :

gif 4

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம் மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் ஆகிய நீர்ப்பணி நிலையங்களுக்கு மின் விநியோகம் செய்யும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று 8ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, கம்பரசம் பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, டர்பைன் நிலையத்துக்கு உட்பட்ட மலைக்கோட்டை, சிந்தாமணி, பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்துக்கு உட்பட்ட தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை ஆகிய பகுதிகளில் இன்று 8ம் தேதி ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. நாளை 9ம் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.