ஆன்லைன் வகுப்பு தடுமாற்றத்தில் பெற்றோர்கள், அல்லாடும் மாணவர்கள்

0
Business trichy

ஆன்லைன் வகுப்பு தடுமாற்றத்தில் பெற்றோர்கள், அல்லாடும் மாணவர்கள்

கொரோன தொற்று பரவலைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பரவும் அபாயம் உள்ளதாலும் மேலும் மாணவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. சென்ற கல்வியாண்டு மாணவர்களுக்கு கடைசிப் பகுதியில் உள்ள பாடங்கள் முடிக்காமலே கல்வியாண்டு முடிந்துவிட்டது. என் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இப்படியாக சென்ற கல்வி ஆண்டு முடிந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.


இப்படியான காலச் சூழலில் இந்த கல்வி ஆண்டு தொடங்க கால தாமதம் ஏற்பட்டு கொண்டே சென்றது. இறுதியாக ஆகஸ்ட் மாதம் பாதியில் இருந்து இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதாவது மாணவர்கள் வீட்டிலிருந்து இணையதள வசதிகள் மூலமாக தொலைபேசி, லேப்டாப் போன்ற சாதனங்களை கொண்டு வீட்டிலிருந்தவாறே தனது கல்வியைத் தொடரலாம் என்று கூறப்பட்ட நிலையில் அரசும் அதை அங்கீகரித்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது.
இதுவே தற்போது பெற்றோர்களை திணறடித்து கொண்டும், மாணவர்களை கலங்கடித்து கொண்டும் இருக்கிறது என்றே கூறலாம். இன்னும் தமிழகத்தின் சில மலைப்பகுதிகளிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் இணைய வசதி சென்றடையவில்லை என்பதே உண்மை. இப்படியிருக்க மாணவர்களுக்கு இணையம் மூலமாக வகுப்பு என்பது மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

loan point

இது குறித்து கூறுகிறார் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சிவா : எனக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் எட்டாம் வகுப்பு படிக்கிறார், மற்றொருவர் ஆறாம் வகுப்பு வகுப்பு படிக்கிறார். இருவருக்கும் ஒரே நேரத்தில் தான் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் எங்கள் வீட்டில் இருப்பதோ இணையவசதி உள்ள ஒரே ஒரு தொலைபேசி. அதுவும் என்னிடம் தான் இருக்கிறது நானும் வெளியே வேலைக்குச் சென்று விடுவேன். ஆனால் இப்பொழுது என்னுடைய தொலைபேசியை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறேன். அதில் ஒரு மகன் பயன்படுத்திக் கொண்டு வகுப்பில் பங்கேற்கிறார். மற்றொரு மகன் பங்கேற்க வாய்ப்பு இல்லை. இன்னொரு தொலைபேசி வாங்கவும் தற்போதைய பொருளாதார சூழல் இடமளிக்கவில்லை. என் மூத்த மகன் பங்கேற்கும் இணைய வகுப்புக்கும் 2 ஜிபி க்கு மேலாக ஒரு நாளைக்கு நெட் செலவாகிறது. இதற்கு ரீசார்ஜ் செய்வதற்கு தனியாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அப்படி இருக்க இளைய மகன் ஆல் பாடங்களை கற்க முடியவில்லை. இப்போது கல்வி தொலைக்காட்சி வந்திருக்கிறது. பரவாயில்லை ஆனால் அவனுடைய ஆசிரியர்கள், அவன் தொலைக்காட்சி வழியாக படிப்பதை கணக்கில் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
மேலும் என்னுடைய பெரிய மகன் தொடர்ந்து ஒரு மணிநேரம் போன் உற்றுநோக்கி கொண்டிருப்பதால் மூன்று நாட்களாக அவருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. கூடிய விரைவில் பவர் கண்ணாடி அணியும் நிலைக்கு அவர் வந்து விடுவார் என்று நான் எண்ணுகிறேன். என்று கூறினார்

nammalvar
web designer

மேலும் இது குறித்து தொடர்ந்து வரும் செய்திகளை பார்க்கும் பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க திறன்பேசி இல்லாததால் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் எனும் விவசாய கூலித்தொழிலாளியின் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்திருக்கிறார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டுநன்னாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கல்லூரியிலும் ஒரு மகள் பன்னிரெண்டாம் வகுப்பும் இன்னொரு மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர்களது வீட்டில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் மூத்த மகள் மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் பாடங்களை படித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மற்ற இரண்டு மகள்களும் சண்டை போட்டதால் மூவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மூத்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

AISF மாவட்ட துணைச் செயலாளர் கௌதம்

இதுகுறித்து அனைத்திந்திய மாணவர்கள் பெருமன்றத்தின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் கௌதம் கூறுகையில்.‌ கல்வி என்பது இன்றியமையாதது தான் ஆனால் அரசு அவசர அவசரமாக நடவடிக்கைகளை எடுப்பது என்பது ஏற்புடையது அல்ல. ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி கொடுக்கும் பொழுது ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறையை வெளியிடவில்லை. அப்படி கூறப்பட்டிருக்கும் ஒரு சில வழிமுறைகளும் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்று அரசாங்கம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இன்னும் மின் இணைப்பே சென்றிராத கிராமப்புறங்களிலும் தமிழகத்தில் இருக்கிறது என்பதை அரசு மறந்துவிட்டதா. இணைய வசதி அனைவருக்கும் சென்றுவிட்டதை அரசு உறுதி செய்து விட்டதா. சிறிய குழந்தைகளிடமும் தொலைபேசி பயன்பாடு அதிகரிப்பது என்பது, குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கும் என்பதை அரசு உணரவில்லையா. மாணவர்கள் தொலைபேசியை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் பார்வை குறைபாடு மன அழுத்தம் போன்றவை வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலைகளும் நடைபெற்றிருக்கிறது. நேற்று திருச்சியிலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. எனவே அரசு உரிய கவனம் செலுத்தி ஆன்லைன் வகுப்புகளை கையாளவேண்டும். மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து மருத்துவக் குழுவுடன் பரிசீலித்து ஒரு வழிகாட்டு நெறிமுறை வெளியிட வேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுவது வரவேற்கக் கூடிய விஷயம். என்று கூறினார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.