ஆண்டவன் கல்லூரியில் பயின்ற ஆணழகன்

0
Business trichy

ஆண்டவன் கல்லூரியில் பயின்ற மாணவர் ராஜரத்தினம் வளுதூக்குதல், பளுதூக்குதல், உடற்கட்டழகு உட்பட்ட பிரிவுகளில் சாதனை புரிந்து வருகிறார். அச்சாதனை குறித்து ராஜரத்தினம் கூறுகையில் எங்கள் குடும்பம் விவசாய குடும்பாமாகும் அப்பா சரவணன், அம்மா வசந்தி. விடுமுறை காலங்களில் நேரத்தை வீணாக்க கூடாது என அப்பா ஜிம்மிற்கு அனுப்பினார். ஆரம்பத்தில் அதில் ஆர்வம் இல்லாமல் செய்து கொண்டிருந்தேன் பல நேரங்கள் போகாமல் தவிர்த்துவிடுவேன்.

உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பார்க்கும் போதும், மற்றவர்கள் உடல் உறுதியை குறித்து பெருமையாக கூறும்போதும் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது, அந்த உந்துதல் தான் என்னை இந்த இடத்திற்க்கு அழைத்து வந்துள்ளது என்றார்.

என்னை போட்டிகளில் பங்கேற்க செய்வதில் முக்கிய பங்காற்றியவர் பயிற்சியாளர் சிவகுமார் தான். அவருடைய வழிகாட்டுதலின்படி 2009ல் உடற்பயிற்சியை முறையாக செய்ய ஆரம்பித்தேன். முதன்முதலாக 2010ல் திருச்சி கிளை உடற்பயிற்சி கூடங்கள் சேர்ந்து நடத்திய போட்டியில் பங்கேற்றேன், 45பேர் பங்கேற்ற அந்த போட்டியில் 3ஆம் இடம்பெற்று மேன் மேக்கர் பட்டம் பெற்றேன். நான் இரண்டு பிரிவின் கீழ் போட்டியிடுவேன்.

loan point

முதலில் வளுதூக்கும் போட்டி, இரண்டாவது ஆணழகன் போட்டி, பல போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளேன் ஆனால் நான் பங்கேற்பதை மட்டும் நிறுத்துவதில்லை. தொடர்ந்து 2011ல் திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 3வது இடம் பிடித்து மிஸ்டர் திருச்சி பெற்றதோடு, முதல் இடத்தை பிடித்து மற்றொரு பிரிவில் மிஸ்டர் ஹேன்சம் என்ற பட்டத்தை பெற்றேன். ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரம் உடற்பயிற்சி, 1மணி நேரம் நடைபயிற்சி, அரைமணி நேரம் தியானம் செய்து வருகிறேன்.

nammalvar

இப் பயிற்சி என்னை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. 2015ல் இந்திய பிட்னஸ் பெடரேசன் நடத்திய மாநில அளவிலான போட்டியில் பென்ச் பிரஸ் பிரிவில் 1 முதல் பரிசு பெற்றேன். ஆதனை தொடர்ந்து 2016ல் திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 2ஆம் பரிசு பெற்றேன் அதில் உடலில் உறுதியான மனிதர் என்ற பட்டம் பெற்றேன்.

web designer

2017 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேசன் சார்பில் கோவையில் நடத்தப்பட்ட போட்டியில் 85 கிலோ எடை பிரிவில் 200 கிலோ வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்தேன். அடுத்து என்னுடைய இலக்கு தென்னிந்திய அளவில் பங்கேற்று வெற்றி பெறுவதே ஆகும். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காகவே நான் பட்ட மேற்படிப்பை படித்து வருகிறேன். இளங்கலை கணிதம் பட்டபடிப்பை பெரம்பலூரில் படித்தேன், எம்.பி.ஏ படிப்பினை திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் தற்போது படித்து வருகிறேன். என்னுடைய வறுமை உடம்பை பாதுகாக்க போதுமானதாக இல்லை. அதற்காக கல்லூரியில் இருந்து நிதி உதவியும் பெற்றுள்ளேன்.

காலையில் படிப்பு மாலையில் உடற்பயிற்சியாளர் என உழைத்து எனது உடலை உறுதியாக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு சுமார் 400 ரூபாய் வரை உணவிற்காக மட்டும் செலவாகிறது. உடற்கட்டழகால் றெக்க மற்றும் வீரசிவாஜி உள்ளிட்ட படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடித்தேன். பல நேரங்களில் சாப்பிடாமல் இருந்துள்ளேன்.

என்னுடைய பயிற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்தால் இந்திய ஆணழகன் போட்டியில் நிச்சம் வெல்வேன் என்று கூறுகிறார். என்னுடைய ஆசை, இளைஞர்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி கற்றுதர வேண்டும்; பல ஆணழகன்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம். உடல் கட்டழகு பயிற்சியல் ஈடுபடுபவர்கள் பயிற்சியும், முயற்சியிலும் மட்டுமே உடலை உறுதி செய்ய வேண்டும் சிலர் ஊக்கமருந்துகளை பயன்படுத்துகின்றர். இது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும் என்றார்.

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் உடலுக்கு வேலை கொடுப்பது என்பதையே பெரிய வேலையாக நினைக்கிறார்கள். உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே நம்முடைய உடல் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்க்கும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

– வெற்றிச்செல்வன்

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

IAS academy

Leave A Reply

Your email address will not be published.