ரெங்கராஜா பெயர்க்காரணம்….

திருவரங்க சரிதம்

0
1

சந்தாசாஹிப் தலை வெட்டப்பட்டு முகமது அலி தமிழகம் முழுவதும் ஆளுமை பெற்ற ஆற்காடு நவாப் ஆன கதை பார்த்தோம் ..

அப்போது ஸ்ரீரங்கத்தில் இவ்வளவும் நடந்தாலும் பெரிய அளவில் சண்டை நடைபெறவில்லை!! உணவும், காசும் இல்லாம் சந்தாசாஹிப் மாட்டி செத்தான் !!
மைசூர்படைகள் கையில் ஸ்ரீரங்கத்தை கொடுத்து விட்டு திருச்சியை ஒரு ரெண்டு மாசம் கழித்து தருகிறேன் என்று சொல்லி விட்டு முகமது அலி ஆற்காடுக்கு போய் விட்டான் .. திருச்சியில் அவனது கொஞ்சம் படைகள் மற்றும் வேலைக்கு வைத்த வெள்ளைகாரன் படைகள் விட்டு விட்டு ..ஸ்ரீரங்கத்தின் உள்ளே பல ஆண்டுகளுக்கு பின் அரங்கன் மீது பக்தி கொண்ட தளபதி நந்தி ராஜா மற்றும் அவனது 3000 குதிரை மற்றும் பல ஆயிரம் காலாட்படைகள் படைகள்!! பல இடிந்த திருமதில்கள் உயர்த்தி, பீரங்க வைக்கவும் ஆள்கள் நின்று சண்டையிடவும் அகலமாக திருத்தி கட்டப்பட்டன !!

மைசூர்காரர்கள் ஸ்ரீரங்கம் கோட்டையில் இருந்து திருச்சி கோட்டையை தாக்குவார்கள் என்று அன்று வெள்ளைகார படைகள் முன்னேற்பாடக ஸ்ரீரங்கத்தை தாக்க உள்ளே புகுந்தனர்.. அவர்களது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது ..

2

வெள்ளைகாரனால் அரங்கமாநகரை வெல்ல முடியவில்லை !! அந்த இரவிலேயே பல வெள்ளைகாரன் படைவீரர்கள் ஓடி விட்டனர் .. சுமார் 20 பேர் /அதில் ஏழு பேர் வெள்ளைக்காரன் !!

மறுநாள் இரவு…. இந்த வெள்ளைக்காரன் குறிப்பில் இருந்து கடந்த சில வருடம் முன்வரை இருந்த சந்திரிக்கா கல்யாணமண்டபம் தான் அது என்று தெளிவாகிறது அது ஒன்றுதான் 100 ஜ் 100 அடி அளவு உள்ள சந்திரம் 1510&ல் கட்டப்பட்டு இந்த சண்டை நடைபெற்றபோது 1752 இருந்த கட்டிடம்.

1788ல் வரையப்பட்ட படத்தில் வலது பக்கத்தில் செங்கல் கட்டிடம் தெரிகிறது அல்லவா அதுவும் ஒரு சந்திரம் .. அன்று ராஜகோபுரம் பகுதியில் இருந்து திருமஞ்சன வாய்க்கால் (இன்று மங்கம்மாநாகர் அருகில் இருக்கும் வாய்க்கால் ) வரை நிறைய சத்திரங்கள் இருந்தன!!!

ஆற்காடு நவாப் முகமது அலியின் படைகளும் ஸ்ரீரங்கம் உள்ளே வந்து இன்று ரெங்கராஜா தியேட்டர் முன்னே இருக்கும் மண்டபகங்கள் இருந்த இடத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த செங்கல் கட்டிட சத்திரத்தில் உள்ளே தங்கள் படைகளை நிறுத்தி கொண்டனர்!!!

300 மைசூர் படைகள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் உள்ளே இருந்து விரைவாக பாய்ந்து வந்து முதலில் துலுக்கன் படைகளை விரட்டி அடித்து விட்டு எதிர்புறம் கேப்டன் டால்டன் இருக்கும் சத்திரத்தை நோக்கி வந்தனர்!! நிற்க …


ரெங்கநாதனை ஏன் ரெங்க ராஜா என்றும் நம் முன்னோர் அழைத்தனர் என்று இன்று நீங்கள் அறிந்து கொண்டு இருப்பீர்கள் ..

உலகில் 10,008 விஷ்ணு ஆலயங்கள் இருக்கலாம்… நிஜ மனிதர்களையும் குதிரை படைகளையும் பீரங்கிகளையும் தனது கோட்டையின் உள்ள சந்தித்தவன் அரங்கன்!!! இன்று நீங்கள் காணும் ராஜகோபுர வாசல் வழியாக சுமார் 2500-3000 குதிரை வீரர்கள் பாய்ந்து சென்று துலுக்கன் / வெள்ளைகாரனை வெட்டி வீழ்த்தினார்கள் –

நீங்க இன்று காணும் எந்த சினிமாவிலும் இவ்வளவு பிருமாண்ட காட்சியை நீங்க கண்டு இருக்க முடியாது!!! – நாளை ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நடந்து செல்லும் பொது ஒரு கணம் நினைத்து பாருங்கள் ஸ்ரீரங்கத்தின் அந்த வீரசரித்திரத்தை!!
கேப்டன் டால்டன் என்ன ஆனான் என்பதை…. அடுத்த இதழில்…

3

Leave A Reply

Your email address will not be published.