திருச்சி ஹெட் மாஸ்டர், பள்ளியின் ரியல் மாஸ்டர் – கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

0
D1

திருச்சி ஹெட் மாஸ்டர், பள்ளியின் ரியல் மாஸ்டர் – கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

ஆசிரியர்கள் என்றாலே ஆச்சரியம் என்று சொல்லும் அளவிற்கு படித்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் இருந்திருப்பார். ஆசிரியர்கள் எழுத்துக்களை மட்டும் கற்றுக் கொடுக்காமல் வாழ்வதற்கான வாழ்க்கை முறையையே கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.


பள்ளிக் கட்டணம் கட்டாவிட்டால் பள்ளிக்கு வராதே என்று தனியார் பள்ளிகள் கூறும். ஆனால் இந்த மாணவன் ஏன் வரவில்லை. இந்தப் பையனின் வீட்டுக்கு அருகில் உள்ள மாணவனை அழைத்து, விசாரித்து வராத மாணவனின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு அழைத்து வருவது அரசுப் பள்ளியும் அதன் ஆசிரியர்களும்.
இப்படி அரசுப்பள்ளிகளை பற்றி அடுக்கிக் கொண்டே செல்லலாம். அரசு பள்ளிகள் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அரசுப்பள்ளியின் ஆசிரியர்களும் முகத்திற்கு முக்கியமே.

D2


திருச்சி பெரியகடைவீதி, வெள்ளை வெற்றிலை கார தெருவில் அமைந்துள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு இருந்த நிலை, தற்போது இருக்கும் நிலை ஆச்சரிய படுத்துவதாக உள்ளது. அதைப்பற்றி தேடி அந்தப் பள்ளிக்குச் சென்றபோது 2010ஆம் ஆண்டிற்கு முன்பு அந்தப் பள்ளியில் வெறும் 21 மாணவர்களை கொண்டு மட்டும் இயங்கிக்கொண்டிருந்த அந்த கல்வி நிலையம் தற்போது 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று இருக்கின்றனர்.
அன்று போதிய மாணவர்கள் இல்லை, சரியான கட்டிட வசதி இல்லை என்று கைவிடப்படும் நிலையிலிருந்த அந்தப் பள்ளியின் தற்போதைய நிலையை மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதன் மூலம் அறியமுடிகிறது.

N2

இத்தனை மாற்றமும் அத்தனை எளிதல்ல, அந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டிய அந்த ஆசிரியரை அடையாளப்படுத்துகிறது என் திருச்சி. காம். அவர்தான் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பா.ரெஹ்னா பேகம்.
2010 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு பா.ரெஹ்னா பேகம் தலைமையாசிரியராக வரும் பொழுது வெறும் 21 பள்ளி மாணவர்களை கொண்டு இயங்கி வந்த பள்ளி தற்போது 120 க்கும் மேற்பட்ட தலைவர்களை உருவாக்கி வருகிறது. மேலும் அந்த பள்ளியின் உடைய கட்டமைப்பும் மேம்படுத்த பட்டிருக்கிறது.

தலைமையாசிரியர் பா.ரெஹ்னா பேகம்
தலைமையாசிரியர் பா.ரெஹ்னா பேகம்

தலைமையாசிரியர் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி மாணவர்களை ஆங்கில பேச்சாளர்களாக உருவாக்கி வருகிறார். பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி சாய்னா என்பவர் சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த பள்ளியில் கராத்தே வகுப்புகள், பரதநாட்டிய வகுப்புகள் நடைபெறுகின்றது. டிசி இல்லாத மாணவர்களையும் பள்ளியில் இணைத்து வாழ்க்கையை மீண்டு எடுப்பதற்கான முயற்சியில் இந்த பள்ளி ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர் அந்த பள்ளிக்கு பணியாற்ற வரும் பொழுது கட்டிட வேலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணியை துரிதப்படுத்தி மேலும் பல்வேறு உதவிகளை பெற்று அந்தப் பள்ளியை உயர்த்திக் காட்டியிருக்கிறார் தலைமையாசிரியை.
ரோட்டரி சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவி மற்றும் தலைமையாசிரியரின் முயற்சியின் மூலமாக அந்த பள்ளி தற்போது தொடர்ந்து இயங்கி கொண்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.


முதலில் கூறியது போல ஆசிரியர் பணி என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பணி என்பதை ஆசிரியர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்‌. பா.ரெஹ்னா பேகம் போன்ற ஆசிரியர்களே சமூகத்தின் மாற்றங்கள்.

ஆசிரியர்களைப் போற்றுவோம். கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உதவுவோம்

N3

Leave A Reply

Your email address will not be published.