திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் 8 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் :

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் 8 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் :

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி, மேற்கு தாசில்தார் குகன் ஆகியோர் புத்தூர் மீன் மார்க்கெட்டில் 8 கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று இரவு மீன் மார்க்கெட் பகுதிக்கு அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளிம், திடீரென மார்க்கெட்டில் கடைகளுக்கு சீல் வைத்தால் மீன்களை எங்கு கொண்டு வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மீன் வியாபாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, விதிமுறையை மீறி கொரோனா வைரஸ் பரவும் வகையில் செயல்பட்ட 8 மீன் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அதை உடனடியாக வசூல் செய்தனர். தொடர்ச்சியாக இது போல் செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
