திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  புகையிலை பொருள்கள் பறிமுதல்:

0
Business trichy

திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  புகையிலை பொருள்கள் பறிமுதல்:

 

திருச்சி மாநகரைப் பொறுத்தவரை காந்தி சந்தை, பெரிய கடை வீதி, அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பிறகும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிகளவில் விற்கப்படுகிறது. குறிப்பாக கரோனா பொதுமுடக்கத்திலும் புகையிலை பொருள் விற்பனை கோடி கணக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

Rashinee album

இந்நிலையில் அரியமங்கலம் லட்சுமிபுரம் ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள கிடங்கில் புகையிலை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக அரியமங்கலம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 1003 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல திருச்சி காந்திசந்தை பிச்சை நகரில் உள்ள கிடங்கில் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 90 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Image

சம்பவங்கள் குறித்து அரியமங்கலம், காந்தி சந்தை போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்தனா். பெரியகடை வீதி வளையல்காரத் தெருவைச் சோ்ந்த ஹன்பத்லால், வெங்கடேசன் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.