திருச்சியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை:

0
Business trichy

திருச்சியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை:

web designer

திருச்சி சங்கிலயாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஆறு லலிதா (19). பிளஸ்-2 முடித்துள்ள இவர் திருச்சியில் தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் பாட பிரிவில் சேர்ந்துள்ளார். தற்பொது கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடம் ஆறு லலிதாவிற்கு புரியவில்லை. இதனால் மனமுடைந்த ஆறு லலிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் ஆறு லலிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.