காண்ட்ராக்ட் லேபர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி

0
D1

தூய்மைப் பணியாளர் ரவிக்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தூய்மை பணியாளர்கள் ஒடுக்கப்படுவது இன்றைய காலத்தில் நடப்பது மட்டுமல்ல ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தியாவினுடைய சுதந்திரத்திற்காக துப்புரவு தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்தியாவினுடைய முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் முதல் பொது செயலாளர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக ஜவர்கலால் நேரு இருந்தபொழுது துப்புரவு தொழிலாளர்கள் இந்திய சுதந்திரத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அலுவலகத்திற்கு சென்று அவர்களின் மேசையில் மலக் கழிவுகளை வைத்து போராடி இருக்கிறோம். இப்படியாக இந்திய சுதந்திரத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் பங்கு பெரியது. அன்றெல்லாம் எங்களை முக்காடு கேஸ், முகமூடி கேஸ் என்று தான் அழைப்பார்கள்.

சுதந்திரம் அடைந்த பிறகும் எங்களுடைய அவலங்கள் முடியவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது வறுமையின் காரணமாக சாக்கடை ஓரங்களில் செத்து கிடக்கும் கோழிகளை எங்களுக்கு உணவாக கொடுத்தே எங்கள் பெற்றோர்கள் எங்களை வளர்த்தார்கள். ஒரு பக்கம் வறுமை இன்னொரு பக்கம் சாதிய முரண்பாடு என்று எங்கள் பெற்றோர்கள் தினம் செத்து பிழைப்பார்கள். தற்போது அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது என்பது உண்மைதான்.

D2

எங்கள் தூய்மை பணியாளர்களுக்கு முன்பு காலரா, அம்மை போன்ற நோய்கள் எளிதில் தாக்கிக் கொண்டு இருந்தன. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய வயதிலேயே இயற்கை எய்தினார். இதெல்லாம் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்தவை.

N2

தற்போதைய நவீன நாகரிக வளர்ச்சி தூய்மைப் பணியாளர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் கல்வியறிவு பேராத மக்களுக்கு அனுபவ அறிவு ஒரு பாடமாக அமைந்தது. நிலைகள் மாறத் தொடங்கின தூய்மைப் பணியாளர் வீட்டு குழந்தைகளும் கல்வி பெறுவது அதிகரிக்கத் தொடங்கியது. இதுதான் தூய்மைப் பணியாளர்கள் பெற்ற முதல் வெற்றி. இப்படியாகத்தான் தூய்மைப் பணியாளர்களின் ஆரம்பகட்ட வாழ்க்கை அமைந்தது. தற்போது அவையெல்லாம் கொஞ்சம் மாறியிருப்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.

தூய்மை பணியாளர்களின் தற்போதைய நிலை
தூய்மை பணியாளர்கள் மக்கள்தொகை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் ஆனால் அதுபோன்ற நிலை தற்போது இல்லை. மேலும் தூய்மைப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி வருவதற்கு ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் ஆகிறது.

காண்ட்ராக்ட் லேபர்கள் என்று பணிக்கு அழைத்து வரப்படுபவர்களுக்கு உண்மையான ஊதியம் கொடுப்பது இல்லை அவர்களை அடிமைப் போல் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு அறிவித்து இருக்கக்கூடிய எவ்வித பலனும் கிடைப்பதில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை விருப்பமிருந்தால் வா, இல்லையென்றால் சென்றுவிடு, இந்த வேலையாவது கிடைக்குமா என்று பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். வறுமையின் காரணமாக எவ்வித பலனும் இன்றி காண்டராக்ட் ஊழியர்கள் தினக்கூலிக்கு இந்த வேலைக்கு வருகின்றனர்.

திருச்சியின் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்ல பேரல் பயன்படுத்தப்படுகிறது.அதில் இப்படி பெரிய கழிவுகளை எடுத்து செல்ல முடியும். மழைக்காலங்களில் அதில் தண்ணீர் நிரம்பி விடுகிறது. பெரிய திடக் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. முன்பு திருச்சியில் பெரிய பெரிய கனரக லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்படும். ஆனால் இப்பொழுது சில லாரிகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சுனாமி, கஜா, புயல் சென்னை பெரு வெள்ளத் தின் போது தூய்மைப்பணியாளர்கள் உடைய பணிகள் மிகப்பெரியது. அந்தக் காலக்கட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய பணிகளை கண்டு அனைத்து மக்களும் இதை பாராட்டி இருக்கின்றனர். தற்போது கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்கள் உடைய பணி மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

தற்போது எங்களுக்கு மக்கள். மரியாதையும் பெரிய அளவில் கொடுக்கின்றனர் என்று தூய்மைப் பணியாளர் ரவிக்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று கூறினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.