முஸ்தபா.. முஸ்தபா.. டோன்வொரி முஸ்தபா…. நானும் உன் தோழன் முஸ்தபா…

ஆதரவற்ற நாய்களுக்கு உதவும் திருச்சி தம்பதியினர்

0
1

நாய்கள் மனிதனின் உற்ற தோழனாக இருப்பவை. மனித வாழ்வில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் விசுவாசத்தை அங்கீகரிக்கவும் வீடற்ற, ஆதரவற்ற தெருவோர நாய்களை பாதுகாக்கவும் தத்து எடுக்கவும்  விழிப்புணர்வை ஏற்படுத்த  சர்வதேச நாய்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச நாய் தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் கூறுகையில்,

சர்வதேச நாய் தினம் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தேசிய நாய் தினமாக செல்லப்பிராணி மற்றும் குடும்ப வாழ்க்கை முறை நிபுணரும் விலங்கு மீட்பு வழக்கறிஞருமான கொலின் பைஜாலால் தொடங்கப்பட்டது.

2

ஆகஸ்ட் 26 அன்று தனது குடும்பம் ஒரு விலங்கு தங்குமிடம் வீட்டிலிருந்து முதல் நாய் ‘ஷெல்டி’யை தத்தெடுத்த தேதி என்பதால் அவர் நாய்கள் தினத்தை கடைப்பிடிக்கத் தேர்ந்தெடுத்தார்.  “ஒவ்வொரு ஆண்டும் மீட்கப்பட வேண்டிய நாய்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்க, பொதுமக்களுக்கு உதவுவதோடு, உயிரைக் காப்பாற்றவும்,  பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஆறுதலளிக்கவும் ஒவ்வொரு நாளும் தன்னலமின்றி உழைக்கும்  நாய்களை அங்கீகரிக்கவும் நாய் தினம்  கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் நாய்களின் நலனிற்காக செயல்படும் அமைப்புகளுடன்  தன்னார்வலர்கள் இணைந்து தொண்டு செய்யலாம். ஒரு செல்ல நாயைப் பெற  திட்டமிட்டால், சர்வதேச நாய் தினம் குறியீடாக இருப்பது சிறந்த நாள் ஆகும். ஒரு நாயை ஒரு தோழனாகத் தேடும்போது, ​​நீங்கள் “தத்தெடுக்க வேண்டும், நாய்கள் பாதுகாப்பானது. தோழமையானது. குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருக்கக்கூடியது.

 நாய்களில் பல்வேறு இனம் வகைகள் உள்ளன.ஒவ்வொரு நாய்களுக்கும் அதன் இனத்தை சான்று அளிக்க உலகளாவிய அமைப்பான “கென்னல் கிளப்” அமைப்பு உள்ளது. 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரிடமும் அன்பாக பழக கூடிய செல்லப் பிராணி  நாய் ஆகும்.

தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், பணி நாய்கள், வேட்டை மீட்டெடுப்பு நாய்கள் என வகைப்படுத்தி பயிற்சி எடுத்து வளர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாய்கள் அழகிய தோற்றத்துடனும்,  விளையாட்டுப் பண்புடனும், ஆக்ரோஷ குணம் உடையதாகவும்  காணப்படும். வீட்டில் உள்ளவர் களுக்கு உற்ற தோழனாகவும் பாதுகாவலனாகவும்  நாய்கள் இருக்கும்.  நம் தமிழகத்தில் வேட்டைக் காரர்களால் விரும்பி வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில்  இராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி நாய் போன்றவை ஆகும்.

எங்களைப் பொறுத்தவரை எங்கள் குடும்பத்தினர் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாய்கள், கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட, செல்லப் பிராணிகள் ஆகியவற்றுக்கு உதவும் வண்ணம் வீட்டின் முன்புறம் குடிநீரும் உணவுகளும் பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். 

தெருவோர பிராணிகளுக்கு எங்களால் இயன்றவரை உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.