
ராஜகோபுரம் உள்ளே நுழைந்த உடன் இருக்கும் வீதிக்கு பெயர் … இடது புறம் திருவள்ளுவர் வீதி அதற்கு எதிர்புறம் சாத்தார வீதி (சாத்தாத (புரிநூல் அணியாத) வைணவர்கள் வாழும் வீதி.. பாமர் வழக்கில் பூச்சந்தை வீதி ..
சித்தரை வீதிக்கு வெளியே அடையவளஞ்சான் வீதி வெளிப்புற மதில்கள் அச்சுதப்ப நாயக்கன் (1560 tஷீ 1580) காலகட்டத்தில் கட்டப்பட்டு விட்டன… ஆனால் அங்கே மக்கள் யாரும் குடியேறவில்லை …
முன்பகுதி (தென்புற வீதி) அதாவது இன்று நீங்கள் காணும் சாத்தார வீதி, அதன் எதிர்புறம் உள்ள திருவள்ளுவர் வீதி மற்றும் சித்திரை வீதியின் திருமதில்களை ஒட்டி செல்லும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை பெயரிலும் கிழக்கே மாணிக்கம் பிள்ளை பெயரிலும் தெரு இருக்கிறது .. நடுவில் நிறைய குறுக்கு தெருக்கள் சந்துகள் நிறைய காணப்படுகிறது ..

இந்த இடத்தில் அந்த கால கட்டத்தில் மிக மிக பிரமாண்ட ராணுவ படைகள் தங்கி இருக்க மைதானம் இருந்தது ..
ஸ்ரீரங்கம்வாசிகள் பலர் இந்த வீதியில் இருந்து மூலத்தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மிக மிக பழங்கால கட்டிடம் இருந்ததை பார்த்து இருந்திருப்பீர்கள் .. அதில் அன்றைக்கு துணிகளுக்கு சாயம் ஏற்றி குடுக்கும் “ராம்லோக்” என்கிற ஒரு கடை இருந்தது ..
இதுதான் நாயக்கர் கால கட்டிடங்கள்.. நான் அதை பார்த்து இருக்கிறேன் அவை இடிக்கப்பட்டு தற்போது அங்கே பல மாடி குடியிருப்புகள் வந்து விட்டன .. அந்த கட்டிடம் பற்றிய ஒரு அறிய தகவல் …
அந்த ராணுவ பெருமை வாய்ந்த கட்டிடத்தில் புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் ….. அன்றைக்கு அவரின் கீழ் இருந்து பாளையகாரர்களான ராமநாதராஜ குடியில் நடைபெற்ற வாரிசு சண்டையில் தலையிட்டு …
சடையக்க தேவர் (1636 AD To 1645 AD) என்பவரை ஸ்ரீரங்கத்தில் இந்த சாத்தார வீதியில் இருந்த அந்த கட்டிடத்தில் சிறை வைத்தார் ..
குட்டன் சேதுபதி என்கிற ராமநாதபுர ராஜா … (இன்றைக்கு தகுதி இல்லாத வாரிசுகளை தூக்கி சுமக்கும் மக்கள் கவனிக்க) தனது சொந்த மகனான தம்பிதேவரை தவிர்த்து … மிக திறமையான சடையக்க தேவரை சுவீகாரம் எடுத்து அரசாணையை அளித்தார் ..
விசயம் தெரியாமல் திருமலை நாயக்கர் .. சொந்த மகன்தானே அரசுக்கு வர வேண்டும் என்று தம்பி தேவரை அரச பதவியில் அமர்த்தி… சடையக்க தேவரை கைது செய்து… ஸ்ரீரங்கத்தில் இந்த வீதியில் சிறை இட்டார் ..
இன்றுபோல மந்தை ஆடுகள் போல எவன் ஆண்டா எனக்கு என்ன… என்று மக்கள் சோம்பேறியா இல்லாத காலம் அது
மறக்குடியினர் .. ரகுநாத தேவர் மற்றும் நாராயண தேவர் தலைமையில் திறமையில்லாத தம்பிதேவரின் அரியணையை எதிர்த்தனர் ..
இதைவிட பெரிய பிரச்சனை யை திருமலை நாயக்கனின் திருச்சி அதிகாரிகள் சந்தித்தனர்
அன்றைக்கு வட நாட்டில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் புண்ணிய யாத்திரை செல்பவர்கள் .. முதலில் ராமநாதபுர அரச தரிசனம் செய்து அவர்க்கு வெகுமதிகளை அளித்து விட்டு செல்வது வழக்கம் ..
காரணம் இந்த வீர மறக்குடியினர் … ராம பிரான் இலங்கை செல்லும் காலத்தில் அவருக்கு சேவை செய்து அவரால் ஆட்சியில் அமர செய்யப்பட்டு சேது கரையை காத்து வர செய்யப்பட்ட சேதுபதி என ஆசீர்வதிக்கப்பட்ட அரச குடும்பம் என்பதால் .. அது ராமபிரான் கட்டளை என்பதாக அவருக்கு பொருள் மற்றும்
பல மரியாதை பல நூற்றாண்டுகளாக செய்கிறார்கள் .
ராமன் யார் என்ஜினீயரா ??? தமிழன் கடவுள் ராமன் இல்லை என்கிற என்று இன்றும், பல அந்த குடியை சேர்ந்தவர்கள், தங்களின் நீண்ட அரிய முதாதையரின் பெருமையை உணராமல் திராவிட தீதுகள் கூட சேர்ந்து பேசி திரிவது கொடுமை ..
ராமபிரானால் அரசாட்சியும் மரியாதையும் அளிக்கப்பட மறக்குடி அவர்களுடையது என்பதை அவர்களுக்கு யார் எடுத்து சொல்லுவது ??
ஸ்ரீரங்கத்தில் அந்த ராமபிரானால் மரியாதை செய்யப்பட்ட அரசன் சிறையில் இருக்கிறான் என்கிற செய்தி வட நாட்டில் இருந்து வந்த யாத்திரிகர்கள் மத்தியில் பரவி அவர்கள் ஸ்ரீரங்கத்தில் தங்கி விட்டனர்.அவரை தரிசனம் பண்ணிவிட்டே ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று .. சுமார் -25,000 மக்கள் ஸ்ரீரங்கத்தில் தங்கி விட்டனர்.. ராமநாதபுரம் பகுதிக்கு மக்கள் செல்லவில்லை
திருமலை நாயக்கன் உண்மையான மக்களால் விரும்பப்படும் ராஜா யார் என்று அறிந்தது அவரை விடுவித்து ராமநாதபுர அரசனாக்கினான் ..அவர் 1636 AD To 1645 AD வரை ஆட்சி செய்தார் …இவரின் பேரன்தான் புகழ்பெற்ற கிழவன் சேதுபதி அன்று மிக பிருமாண்ட ராணுவ தளமாக மற்றும் எதிரிகளை சிறை வைக்கும் கோட்டையாக இந்த வீதி இருந்தது .. படத்தில் எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் உடன்…
– திரு.விஜயராகவ கிருஷ்ணன்
