திருவரங்க சரிதம்

0

சந்தாசாஹிப் ஸ்ரீரங்கத்தின் கோட்டை உள்ளேயும் பிரெஞ்சு படைகள் திருவானைக்கா கோவில் உள்ளேயும் இருந்ததையும் .. காவேரி கொள்ளிடம் ஆறுகள் கரை புரண்டு ஓடியதாயும் பார்த்தோம் ..

திருச்சி கோட்டையில் தங்கி .. அன்று ஆங்கில படையை வழி நடத்தியவர் Major-General String­er Lawrence  அவருக்கு கீழ் இரண்டு திறமையான தளபதிகள், நாம் அனைவரும் அறிந்த ராபர்ட் கிளைவ் மற்றும் கேப்டன் டால்டன் ..

அன்றைய காலகட்டத்தில் சண்டை எப்படி நடந்தது என்பதை படித்தால் நீங்க ஆச்சரியப்படுவீர்கள் ..

எல்லாரும் மனைவி குழந்தைகளை வெளியில் ஒரு மந்தையில் தங்க வைத்து விட்டு .. அவர்களுடன் பெரிய வியாபாரிகள் கூட்டம் கூடவே வரும் ..அவர்களிடம் வேலை செய்ய பலரும் வருவார்கள் … சண்டை போடுகிறவன் ஒரு ஆளுக்கு நாலு பேரு கூடாரத்தில் தங்கி கூட வருவானுக .. ஸ்ரீரங்கத்தில் அன்று சுமார் 5000-&7000 படைகள் இருந்தார்கள் என்பதால் கூடாரம் இட்டு தங்கி இருந்தனர் ..

லாரன்ஸ் தனது படைகளை இரண்டாக பிரித்து பிச்சாண்டார் கோவிலில் ராபர்ட் கிளைவ் மற்றும் கேப்டன் டால்டன் படைகளை தற்கால ஸ்ரீரங்கம் திருவனைகாவல் குறுக்கே செல்லும் சாலையில் இரண்டு ஊர்களுக்கும் இடையே நிறுத்தினார்.

பின்னர் பிச்சாண்டார் கோவிலில் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் வடகரை பகுதியில் தங்கி இருந்த இந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் கூடத்தை பீரங்கி கொண்டு தாக்கினார்கள் இந்த மக்கள் அங்கேயும் இங்கேயும் ஓடினார்கள் .. தென் பகுதியில் இருந்து டால்டன் படைகளும் இவர்களை பீரங்கியால் தாக்கினர் (ஸ்ரீரங்கத்தை வட மற்றும் தென் பகுதியில் இருந்து தாக்கினார்கள் . இது கோட்டையின் உள்ளே தங்கி இருந்த சந்தா சாஹிபின் படைகளை நிலை குலைய வைத்தது .. அவர்கள் முன்னமே உணவும் பணமும் இல்லாத நிலையில் முன்னூறு பேர் கொண்ட ஆங்கில படையிடம் எங்களை வெளியில் விடுங்க நாங்க ஊருக்கு போகிறோம் என்று எல்லாரும் ஓடி விட்டனர் ..

காரணம் ஒன்றுதான் .. அரங்கன் .. நம்பவே முடியாத எண்ணிக்கை , நிறைய பண பலத்துடன் வந்த சந்தா சாஹிப் அனைவராலும் கைவிடப்பட்டு சரணடைந்து கொல்லப்பட்டான்

food

சந்தாசாஹிப் தன வாழ்நாள் முழுவதும் காசுக்காக சண்டை போட்டவன் அவனுக்கு எல்லாருமே எதிரி .. தன்னை உயிருடன் விட்டால் பல லக்ஷம் தருவதாக தஞ்சாவூர் மராட்ட அரசனிடம் தஞ்சம் அடைய .. அவன் .. சந்தா சாஹிபின் தலையை வெட்டி… கொன்றான் ..

இதில் இரண்டு கதைகள் இருக்கும் .. ராபர்ட் ஓரம் .. அவனது தலையை ஒட்டகத்தில் கட்டி திருச்சி கோட்டையில் ஊர்வலமாக பல முறை நடத்தி தற்கால மேற்புற வாசலில் (தற்போது மிஞ்சி இருக்கும் ஒரே வாசல் அதுதான்- main guard gate ) தொங்க விட்டு வைத்து இருந்தான் என்று சொல்லுகிறார் .

மற்றொருன்று ஸ்ரீரங்கத்தில் நிலவும் கர்ண (செவி வழி) பரம்பரை செய்தி .. விஜயரங்க சொக்கநாதர் – மீனாக்ஷி ஆகியோரின் சுவீகார மகன் விஜயகுமாரன் (கோவிலில் தந்த சிலைகளில் சிறிதாக இருக்கும் ஆண் சிலை) சந்தாசஹிபின் தலையை வெள்ளி தட்டில் வைத்து மூடி , அன்று நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி இருந்த பொது முன்னே வைத்து அவரின் கருணையால் (தான் தனது தாயாரின் மரணத்திற்கு காரணமானவனை கொள்வேன் என்கிற சபதத்தை) நிறைவேற்றிய … ஸ்ரீரங்க வாசிகளுக்கும் அரங்கனுக்கும் தொல்லை அளித்தவனின் (25 ஆண்டுகள் ) தலையை சமர்ப்பித்தான் என்று சொல்லுகிறார்கள் ..

பலர் கேட்கலாம் இதற்கு என்ன பிரமாணம் .. வெள்ளையம்மாள் என்கிற பெண்ணின் தியாக கதை போல இதற்கும் எந்த பிரமாணமும் இல்லை ..

விஜயகுமாரனுக்காக படை எடுத்து வந்த பல மறவர்கள் படை இந்த சந்தா சாஹிப் படை வீரர்களின் பலரது கைகளை வெட்டி விட்டு அனுப்பினார்கள் என்று ஆனந்த ரங்கம் பிள்ளை எழுதி இருக்கிறார். – அரங்கன் தண்டனை குடுத்து போட்டான் என்று எழுதி இருக்கிறார் ..

இங்கிலீஷ்காரர்கள் சந்தா சாஹிப் இறப்பிற்கு பிறகு கோவிலின் உள்ளே சுமார் 1000 ராஜபுத்திர வீரர்கள் தங்கி இருந்த பொது அவர்கள் அரங்கனை காக்க தங்கள் இருப்பதாக சொன்னதை ஆங்கிலேயர் சரி என்று ஒப்புக்கொண்டனர் என்று எழுதி இருக்கிறார் ..

அரங்கன் இப்படி பெரும் படைகளை அழித்தும் தன்னை காத்துக்கொள்ள பெரும் படை யை உருவாக்கியும் (அவர்கள் மனதில் அந்த எண்ணங்களை உருவாக்கியும் ) செய்தான் என்பதை இன்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்!! வெல்லவே முடியாத படியை சண்டையே போடாமல் சிறு படை வென்று அதில் இருந்தே ஒரு ஆயிரம் பெயர்களை தனக்கு வீரர்களாக ஆக்கி .. ஒவ்வொரு கால அளவிலும் பல விசயங்களை மறைமுகமாக செய்து நமது உலகின் சரித்தரத்தை மாற்றியவன் அரங்கன் ..

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பல பல படைகள் வெற்றிகள் கொலைகள் ரத்த ஆறு பார்த்த மண் ஸ்ரீரங்கம் .. இது சனாதன தர்மத்தை நிலை நாட்டிய புண்ணியமான ரத்த பூமி.

gif 4

Leave A Reply

Your email address will not be published.