திருவரங்க சரிதம்….

0

அரங்கன் கோவில் உள்ளேயே நடைபெற்ற உற்சவங்களும், நோய் தொற்றும்…வருடம் 1553

எனது ஆசான் (ஸ்ரீரங்க சரிதம் பற்றி சுமார் 12,000 பக்கங்கள் எழுதியவர்) ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஒரு சந்தேகம் கேட்க போய் இருந்தேன். அவர் எழுதிய புத்தகத்தில் நான் எப்போதோ படித்த ஒரு விசயம் எங்கே வருகிறது என்று கேட்க, அவர் கோவில் ஒழுகு தனது புத்தகத்தில் இரண்டாம் பகுதி 47ஆம் பக்கத்தில் ஒரு விசயம் இருக்கு அதை நாளைக்கு எழுது .. என்றார் .. அவரே மாடியில் இருந்து இறங்கி வந்து தனது பிருமாண்ட புத்தக தேர்வுகளில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்து குடுத்து விசங்களை சொன்னார் .. இது ஒரு நீண்ட கல்வெட்டுக்குறிப்பிலிருந்து பெற்ற ஒரு அனுமானம் …

ஸ்ரீரங்கம் கோவிலில் இன்றும் நடைபெறும் பல திருவிழாக்கள் எப்படி நடைபெற்று இருக்கும் என்பதை விளக்கும் அருமையான கல்வெட்டு ..

‌சந்தா 1

அன்றிய காலத்தில் மிகுந்த செல்வந்த அரசர்கள் ஒரு முழுமையான உத்சவத்தையே தங்கள் கொடைகளால் நடத்துவார்கள்.. அப்படி 1553ஆம் ஆண்டு… சதாசிவராயர் ஆண்டுகொண்டு இருந்த காலத்தில் .. பரிதாபீ ஆண்டிற்கு அடுத்த ஆண்டான பிரமாதீச ஆண்டில் ஆனிமாசம் தேய்பிறை தசமி திங்கள்கிழமை ரேவதி நக்ஷத்திர தினத்தன்று பாண்டிக்குலாசினி வளநாடு (இதுதான் நமது நாட்டின் பெயர் .. ஸ்ரீரங்கம் வாசிகள் கவனிக்க) திருவரங்கம் திருப்பதி ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ பண்டாரத்திற்கு சோமகுலம் ஆத்ரேயா கோத்ரம் ஆபஸ்தம்ப சூத்ரம் யஜூர் சாகை ஆரவீடு ராமராஜுவின் புத்திரரான ராமராஜா செய்து குடுத்த சிலா சாசனம் ..

இந்த உற்சவத்தின் சிறப்பு .. பெருமாள் கோவிலை விட்டு வீதிகளில் புறப்பாடு கண்டு அருளவில்லை!!! இந்த கல்வெட்டில் எவ்வளவு தளிகை அமுது செய்து அதில் என்ன என்ன விசயங்கள் சேர்த்தார்கள். அவைகளை யாருக்கு என்ன கைங்கரியம் செய்த கொடுத்தார்கள் என்கிற விசயங்கள் மிரட்டுகிறது .. அன்று பணமில்லா சமுதாயம் கோவிலில் வேலை செய்கிறவனுக்கு பொருள் கோவிலில் இருந்தே வரும். உணவு மற்றும் உடை, தேங்காய் வெற்றிலை முதலியவை ..

முதல் திருநாள் கொடியேற்றம்..அதுவும் கோவிலின் உள்ளே தானே ..

இரண்டாம் நாள் :- சேரநாதவேளான் திருமண்டபம் .. இது கொடி மரத்திற்கு இடது புறம் மேற்கு பகுதியில் இருக்கும் பவித்ரா உத்சவ மண்டபம், இது 800 கிஞி வாக்கில் சேரர் காலத்தில் கட்டப்பட்டது முஸ்லிம் கலாபகதிற்கு பிறகு அரங்கநாதர் .. மூலஸ்தானம் இடிக்கப்பட்டு இருந்ததால் அது கட்டப்படும் வரை இந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்தார்!!

மூன்றாம் நாள் :- பெரியதிருமண்டபம் மேலபத்தி .. இது இன்று நாம் காணும் மகேந்திரன் திருசுற்று .. அதாவது முதல் சுற்று யாகசாலை , பெருமாள் படி இறங்கி வரும் வீதி .. இதில் மேற்கு புற வீதியில் இருந்து இருக்கிறார் .. இன்று அங்கே இரட்டை தூண்கள் தனியாக இருப்பதை காணலாம் .. அங்கே ஒரு வித மண்டப அமைப்பு இருந்திருக்க கூடும் .. நீங்கள் இன்று காணும் கருப்பு தூண்கள் கொண்ட  மண்டபம்  பின்னாலில் ராணி மங்கம்மா காலத்தில் அமைக்கப்பட்டது ..

சந்தா 2

நான்காம் நாள் : பெரியதிருமண்டபம் கீழ பத்தி இது கிளி மண்டபம் பகுதி ஐந்தாம் நாள் :- சூடிக்குடுத்த நாச்சியார் சந்நிதி இது உள் ஆண்டாள் சந்நிதியில் ஒருநாள் முழுதும் இருந்து இருக்கிறார்

ஆறாம் நாள் முதலாழ்வார்கள் சந்நிதி. இது நாம் தாயார் சந்நிதி செல்லும் வழியில்  தன்வந்திரி சந்நிதியின் மேற்கு புறம் இருக்கும் ஒரு நூறு கால் மண்டபம்

ஏழாம் நாள் தேவர்கள் மண்டபம் :- இது என்ன மண்டபம் என்று ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சுவாமிகளுக்கு தெரியவில்லை. காரணம் ஒவ்வொரு நூற்றாண்டும் ஒவ்வொரு இடத்தையையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து இருக்கிறார்கள்.

இந்த விழாவை எற்படுத்தியவன்   அளிய ராமராஜன், கன்னடத்தில் அளிய என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம் .. இவன் புகழ் பெற்ற கிருஷ்ணா தேவராயரின் மாப்பிள்ளை ..

எனது ஆசான் கிருஷ்ணமாச்சாரியார் சுவாமிகளின் அனுமானம் …

  1. இந்த கால கட்டத்தில் தற்கால் தொற்றுநோய் போல எதோ வந்து பல ஊர்கள் மக்கள் பயணம் தடை செய்யப்பட்டு இருக்க வேண்டும் .. அதனால் கொவிலுக்குள்ளேயே உற்சவங்கள் நடைபெற்று இருந்திருக்கு ..
  2. இதே கால கட்டத்தில் ராமராசு மற்றும் சதாசிவ ராயர் காலத்தில் முடிதிருத்தும் கலைஞர்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தும் நிலம் கொடை அளித்து இருப்பதும் தெரிகிறது .. இதில் இந்த கல்வெட்டு மற்றும் சரித்திர ஆய்வுகளில் இந்த கோடை பற்றி சுவாமிகளிடம் காலையில் இருந்து பேசிக்கொண்டே இருக்கிறேன் .. அவரால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை .. நான் பதிவிட்டு இருக்கிற இந்த பக்கம் வருகிறது என்று சொன்ன வுடன் அவர் சொன்ன விசயம் ..

அன்றைக்கு முடி திருத்தும் தொழில் செய்யும் குடியினரே மருத்துவம் செய்து வந்தனர் .. எனவே அன்று நடந்து இருந்த நோய் தொற்றை நல்ல படியாக கையாண்டதற்காக பல ஊர்களில் அவர்களுக்கு வரி நீக்குதல் மற்றும் நிலங்கள் வழங்க பட்டு இருக்கும் என நினைப்பதாக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சுவாமிகள் கருதுகிறார்!!! –

நிர்ணயம் : 1550 இல் நமது தென் இந்தியாவில் பெரிய அளவில் ப்ளேக் போன்று ஒரு வியாதி பரவி இருக்க கூடும் .. அதன் காரணமாக திருவிழாக்கள் கோவில் உள்ளேயே நடைபெற்று இருக்கிறது .. இந்த கால கட்டத்தில் மருத்துவ குடியயை சேர்ந்தவர்களுக்கு பல ஊர்களில் வரி நீக்கம் மற்றும் நிலதானங்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரிகிறது ..

விஜயராகவன் கிருஷ்ணன் / எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சுவாமிகளின் அறிவுரை படி

Leave A Reply

Your email address will not be published.