திருவரங்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

திருவரங்க சரிதம்

0
1

அரங்கன் ஏழு ஆண்டுகள் பூபாலராயன் (தங்க சிம்மாசனம்) இல் இறங்கவில்லை என்பதை பார்த்தோம் .. (1,73,6-42) மராட்டா வீரர்கள் எப்படி அரங்கன் அழைப்பை ஏற்று துலுக்கர்களை ஒழித்து கட்டினார்கள் என்று பார்ப்போம் ..

எவ்வளவோ திவ்ய தேசங்கள் உள்ளான எனக்கு அரங்கன் மீது பயமே அவர் தனது மனிதர்களை தொட்டவனை மிச்சம் வைக்காமல் ஒழிக்காமல் விட்டதில்லை.

1736 ஆண்டு சந்தாசாஹிப் என்கிற கொடியவன் திருச்சி கோட்டையையும் ஸ்ரீரங்கத்தையும் தொல்லை குடுத்து பல வித ஆபத்துக்களை விளைவித்தான் என்று பார்த்தோம்.

சந்தாசாஹிப் திருச்சி மற்றும் மதுரையை பார்த்துக்கொள்ள ஆற்காடு நவாப் சொன்ன பொது தானே ஆள எண்ணி தனது தம்பிகள் புதஷாஹிப் மதுரையிலும், சதுக்சாஹிப் திண்டுக்கல் கோட்டையையும் பார்த்துக்கொண்டு தென் தமிழகத்தை முழுமையாக தானே ஆள திட்டம் இட்டான் .

Robert Orme (25 December 1728 – 13 January 1801) என்கிற இங்கிலீஷ்காரர் சென்னையில் கோட்டையில் வேலை பார்த்தவர் தமிழகத்தில் நடந்த அதும் திருச்சி சண்டையை பற்றி விரிவாக அது நடந்த காலத்திலேயே எழுதி வைத்து இருக்கிறார் ..

அவர் மராட்டிய படைகளை பற்றி எழுதிய வார்த்தை அசத்துகிறது ..

“They have now figured for near a century, as the most enterpnsing, soldiers of Indostan, and as the only nation of Indians, which sseems to, make war an occupation by choice , for the Rajpouts are soldiers by birth”

மே மாதம் 1740இல் தமிழகம் வடக்கே நாவபுகள் கையிலும், மத்திய (திருச்சி ) தென் (மதுரை திருநெல்வேலி) தமிழகம் முழுவதும் துலுக்கர்கள் கையில் இருந்த போது  தஞ்சையை ஆண்டு வந்த மராட்டியர்கள் (அவர்கள் 1670 களிலேயே தஞ்சையை கைப்பற்றி இருந்தார்கள்) அழைப்பை ஏற்று ராகோஜி போன்சலே ஒரு லக்ஷம் வீரர்களுடன் தமிழகத்தின் உள்ளே வட பகுதியில் நுழைந்தார். ஆங்கில எழுத்தாளர் எழுதுகிறார், மராட்டா படைகளின் அவர் ராணுவ சரித்திரத்தில் கேள்விபடாத விசயம் அவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது மைல் … படைகளை நகர்த்தும் வேகம் .. அவர்கள் வருகிறார்கள் என்கிற செய்தி ஒரு ஊருக்கு வரும் முன்பே அவர்களின் படைகள் உங்கள் ஊருக்கும் நுழைந்து விடும் என்று ..

குதிரை படைகள் 40,000- – 50,000 பேர்கள் என்பது அவர்களின் வேகத்துக்கும் காரணம் ..

அன்று ஆற்காடு நவாப் தோஸ்து அலி என்கிறவன் ஒரு 4000 குதிரை 6000 பேருடன் அவரை எதிர்த்து …20th may 1740 .. அன்று செத்து மடிந்தான் … வட தமிழ்நாடு துலுக்கன் ஆளுமை அழிந்தது …

சென்னை பகுதியில் இருந்த தோஸ்த் அலியின் மகன் சுபேதார் அலி பயந்து இந்த சண்டையில் இருந்து ஓடி விட்டான் பின்னர் ஒரு பத்து லக்ஷம் ரூபாய் பணம் குடுத்து மராட்டியர்களுக்கு சேவகம் செய்கிறேன் என்று சொல்லி நவாப் பட்டத்தை பெற்றுக்கொண்டான்

சந்தா சாஹிப் தனது நாவப் செத்தான் என்கிற மகிழ்வில் இருந்தாலும் தனக்கு அடுத்த அடி உண்டு என்று திருச்சி கோட்டையில் வெறும் 5000 குதிரை படைகள் மற்றும் 10000 ஆட்களுடன் உட்கர்ந்து இருந்தான் ..

2

சந்தா சாஹிப் ஆற்காடு நவாப் மராட்ட வீரர்களிடம் தோற்று போனதால் தான் தனியாக அரசனாக திட்ட மிட்டு இருந்ததாலும் நவாப் சுபேதார் அலி மராட்டியர்களுக்கு பணம் தர முடியாததாலும் நீங்க சந்தா சாஹிபை அடிச்சு விரட்டி விட்டு திருச்சி வருமானத்தை எடுத்துக்கோங்க என்று சொல்லி விட்டான் ..

1741 ஆண்டு வரை மாராட்டியர்கள் திருச்சி மீது ஆர்வம் காட்டவில்லை , அவர்கள் சிவகங்கை பகுதியில் முகாமிட்டு இருந்தனர் …

திருச்சி கோட்டைக்கு வலு சேர்க்க மதுரையில் இருந்து சந்தாசாஹிப் இன் தம்பி புதுசாஹிப் 3000 குதிரைகள் மற்றும் 7000 படை வீரர்களை கூட்டிக்கொண்டு திருச்சிக்கு செல்ல அவர்களை மராட்ட படைகள் சுமார் 20000 படை வீரர்களை அனுப்பி அழித்து Budasaheb தலையை கொய்து அதை திருச்சியில் இருக்கும் சந்தாசாஹிப்புக்கு மராட்ட படைகள் அனுப்பினர் …

திண்டுக்கல் கோட்டையையும் தாக்கி சாதிக் சாஹிப் படைகள் 1500 குதிரை 3000 படை வீரர்களை அழித்து அவனையும் வெட்டி கொன்றனர் ..  ரங்கநாதனை ஒரே இடத்தில் உக்கார வைத்து அவனது நெல் களஞ்சியத்தை திருடி எடுத்து சென்ற கொடூர துலுக்கன் நிலை …

அவனது திருச்சி கோட்டை சுற்றி மராட்ட வீரர்கள் மூன்று மாதம் முற்றுகை இட்டு அவனை மற்றும் அவனது வீர்களை பட்டினி போட்டு கதற வைத்து … அவனை விட்டு பலர் ஓடி விட .. வேறு வழி இல்லாமல்

1741ல் மராத்தா படை சந்தா சாஹிபை அவனது குடும்பம் தளபதிகள் அனைவரையும் கைது செய்து அவனது சொத்துகள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு .. முராரி ராவ் என்கிற ஒரு தளபதியை சுமார் 14,000 வீரர்களுடன திருச்சியை ஒப்படைத்து விட்டு சத்தார என்கிற மராத்த நாட்டில் இருந்த கோட்டையில் சிறை வைத்தனர் …

ரெண்டே வருடம் மராத்தியர்கள் … ஒரு ப்ரிமாண்டா படையுடன் வந்து தமிழகத்தில் படர்ந்து இருந்த துலுக்கர்களின் படைகளை அழித்து விட்டு தங்கள் நாட்டுக்கு சென்றனர் … திருச்சியை தனது கைக்குள் கொண்டு வந்த முராரி ராவ் .. அரங்கன் கோவிலின் அரனை வலுப்படுத்தி மறுபடி அரங்கன் சேவைகளை தொடர்ந்தார் …  ஸ்ரீரங்கம் மறுபடி ஒரு ஏழு ஆண்டுகள் அமைதியாக சென்றது …ஆனால் சரித்திரம் சும்மா இருக்கவில்லை .. மேஜர் லாரன்ஸ், இவர்தான் நமது இந்திய ராணுவத்தை சீரமைத்து இன்றும் கடைபிடிக்கும் பல விசயங்களை உருவாக்கியவர் ..

இவர் ஜனவரி மாதம் 1748 வருஷம் கடலூரில் இருந்த போர்ட் செயின்ட் டேவிட் என்கிற கோட்டைக்கு வந்தார் … அன்று பிரெஞ்சு புதுச்சேரி கவர்னர் டுப்லே … இதை கண்டு .. பிரெஞ்சு படைகளை விரட்ட வந்து இருக்காரு என்று புரிந்து …தானே முன்பாக ஆங்கில படைகளை மற்றும் அவர்களது கோட்டைகளை பிடிக்க ஒரு அதிரடி நடவடிக்கைளை எடுக்க ஆயத்தம் ஆனார் ..சென்னையை கூட சிறிது காலம் பிடித்த கதை படித்து இருப்பீங்க .. நாம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போவோம்

ரெண்டு வெள்ளைக்காரன் கதை நமக்கு எதுக்கு என்றால் .. மறுபடி பிரெஞ்சு காரனுக்கு ஒரு நல்லா சண்டை போடக்கூடிய ஒரு இந்திய அடிமை தேவை …

ஸ்ரீரங்கம் ஏழு வருடம் சிம்மாசனத்தை விட்டு நீங்காமல் இருந்து எதிரிகளை துடைத்து .. ஏழு வருடம் அமைதி .. பின்னர் அதே சந்தாசாஹிப் மறுபடி 1748 ஜனவரி மாதம் .. பிரெஞ்சு கவர்னர் … சென்னையை பிடித்த பின்னர் .. தனது திட்டத்தை மாற்றி .. இந்தியாவை வெல்ல ஒரு நல்ல அடிமையாக இருந்த சந்தா சாஹிபை மராத்தாவிடம் ஒரு ஏழு லக்ஷம் ரூபாயை குடுத்து மீட்டனர் ..  1778 வருடம் பதியப்பட்ட இந்த புத்தகம் இந்த தகவலை சொல்லுகிறது. மீண்டும ஒரு அஞ்சு வருஷம் கஷ்டம் … 1752 வரை ..

விஜயராகவன் கிருஷ்ணன்

 

3

Leave A Reply

Your email address will not be published.