ஸ்ரீரங்கத்தில் ஆங்கில பள்ளி ஆரம்பமான கதை

திருவரங்க வரலாறு

0
1 full

ஸ்ரீரங்கத்தில் மிக பெரிய நவீன மருத்துவமனை கட்டிய பெரியோர்கள் ஆங்கில பள்ளி ஆரம்பித்தார்களா என்று ஒருவர் கேட்டு இருந்தார் . ஆம் ஸ்ரீரங்கத்தில் 1875 வாக்கில் ஆங்கில வழி கல்வி போதனை பள்ளி இருந்தது அன்றைய பள்ளிகள் பற்றிய விரிவான அறிக்கைகள் மூலமாக தெரிகிறது . பள்ளிக்கூடம் மிக சிறப்பாகவும் அதில் படித்த மாணவர்கள் நன்றாக படிக்க கூடியவர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் .

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் மந்திரி ராஜன் (1880-&1953) தனது இளமைகால பள்ளிகளை பற்றி “நினைவு அலைகள் ” புத்தகத்தில் இரண்டு பள்ளிகள் இருந்ததாக அவரது ஐந்து வயதில் 1885 இல் கண்டவற்றை குறிப்பிட்டுளார் ..

அவைகள் சித்திரை தேர் மேலே போகும் படிக்கு மேற்கு புற 16 கால் மண்டபம் ,அது ராணி மங்கம்மாள் கட்டியது … மற்றும் ரெங்க ரெங்க கோபுரம் அருகே இருக்கும் தை தேர் மண்டபம் ஆகிய இரு மண்டபங்களில் தான் அன்று இருந்த ஒரு ஆசிரியர் பள்ளியில் படித்தாக சொல்லுகிறார் . மூன்றாவதாக ஒரு பள்ளி இருந்தது அது காசு குடுத்து படிக்கும் பள்ளி Queen’s Diamond Jubilee Lower Secondary School managed by Shri R.Ramanuja Iyengar மற்றும் இன்று புகழ் பெற்று இருக்கும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலை பள்ளி .. இவைகள் 1896க்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது

2 full

இந்த இரண்டு பள்ளிகளும் நடந்த இடம் ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் தற்கால சுமதீந்திர கல்யாண மண்டபம் என்கிற பழைய “சொக்கி மடம்”

இந்த 1876 வருடத்திய பதிவுகளில் ஒரு காற்று ஓட்டம் அதிகமில்லாத மண்டபத்தில் அரசு உதவி பெரும் பள்ளியில் 26 பேர் 1875 ஆண்டு படித்து வந்ததாக சொல்லி இருக்கு ..

முன்னாள் அமைச்சர் ராஜன் படித்த இரண்டு பள்ளிகளுமே ஒரு திறந்த வெளி 16 கால் மண்டபங்கள் தான் அதில் காற்றுக்கு

பஞ்சமில்லை .. எனவே 1875 ஆம் ஆண்டு அரசு பள்ளிகள் மற்றும் பின்னாளில் ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூல் நடந்து வந்த இதன் மண்டபமே முதல் முதலாக ஆங்கில வழி கல்வி போதிக்கப்பட்ட இடம் என்று அறிகிறோம்!!

நிறைய மார்க் வாங்கி திருச்சியின் ஆண்டு பெரிய பள்ளியான S.P.G ..(பின்னாளில் நான் படித்த தெப்பகுளம் அருகில் இருக்கும் பிஷப் ஹீபர் பள்ளி) மாணவர்களை விஞ்சும் அறிவுடன் இருந்தார்கள் என்று எழுதி இருக்கிறார்கள் ..

ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூல் மற்றும் அன்று புகழப்பட்ட SPG பள்ளியிலும் படித்தேன் .. என்ன இந்த ராஜ கோபுரம் அருகில் இருக்கும் இந்த கருங்கல் மண்டபத்தில் பள்ளி இருந்த பொது படிக்கவில்லை ..

150 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி முறையில் என்ன இருந்தது ?- என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார் ..

viva voice- வாய்வழி கேள்வி பதில்கள் – 40 மார்க்

language – english – 60 மார்க்

Dictation- சொல்லுவதை எழுதுவது – 20 மார்க்

translation- மொழிபெயர்த்தல் – வெள்ளை காரனுக்கு முக்கிய தேவை இந்தியாவில் – 60 மார்க்

arithmetic -எண்கணிதம், – கூட்டல் கழித்தல் – 60 மார்க்

Euclid and algebra– அல்ஜீப்ரா தெரியும் அது என்ன யூக்ளிடு ??

கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவை சேர்ந்தவர் Euclid.இவர் கிமு 325-265 வாழ்ந்தவர் ..

இவர் இயற்றிய ணி Euclid elements– இந்த புத்தகமே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை மேலை நாட்டினரால் ஜாமெட்ரி எனப்படும் கணித படிப்பிற்கான புத்தகமாக பயன்பட்டுத்தி வந்தனர் .

the “founder of geometry” or the “father of geometry!!

In the Elements, Euclid deduced the theorems of what is now called Euclidean geometry from a small set of axioms. Euclid also wrote works on perspective, conic sections, spherical geometry, number theory, and mathematical rigour.தமிழ் அல்லது சமிஸ்கிருதம் = மொழிக்கு 60 மார்க் சொல்லி எழுத 20 மார்க்

geography and history =இது நாம இப்போதும் படிக்கிறோம் – 60 மார்க் + 60 மார்க்

மொத்தம் = 500 மார்க்

ஸ்ரீரங்கம் பசங்க = 267-306.5 மார்க் வரை வாங்கி இருக்காங்க !!

3 half

Leave A Reply

Your email address will not be published.