அரங்கன் கோவில் உள்ளே சுதந்திர தாகம்…

திருவரங்க சரிதம்

0

ரெங்க விலாச மண்டபத்தில் வேறு என்ன விசயங்கள் நடந்தது என்று ஒரு நண்பர் இமெயிலில் கேட்டார், முன்னே பின்னே இருந்தாலும் மறந்து விடும் என்பதால் அதை  இன்றே பதிவு செய்து விடுகிறேன் ..

1985 டிசம்பர் 3, அன்றைய இந்த பரந்துவிரிந்த பாரத நாட்டை ஆண்டு வந்த பிரிட்டிஷ் எகாதிபத்தியந்தின் அரசன் நிலையில் இருந்த வைஸ்ராய் விக்டர் புரூஸ் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விஜயம் செய்தார். அவருக்கு கோவில் வாசலில் மரியாதை அளிக்கப்பட்டது.

சந்தா 2

அப்போது பேசிய ஸ்ரீரங்கத்து பெரியவர்கள் 1888ஆம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எவ்வித உரிமைகளும் அளிக்கவில்லை எனவும், அதை கவனிக்க வேண்டும் எனவும் நீண்ட கோரிக்கையை வைத்தனர்.

‌சந்தா 1

19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வைஸ்ராய் முன்பு சுதந்திரம் அதிகாரம் குறித்து பேசுவது, நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள். காரணம் பேச்சு சுதந்திரம் என்றால் என்னவென அறியாத காலம். அவரோ எதுவும் பேசவில்லை. இவரை பற்றி நமது பாடங்களில் ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை. இவரது ஆட்சியில்தான் நமது நாட்டில் இரண்டு பெரிய பஞ்சங்கள் வந்தன. இதனால் சுமார் ஐம்பது லட்சம் பேர் பட்டினியால் இறந்தனர்.

இந்த பிரிட்டிஷ் கொலைகாரர்கள் நமது செல்வங்களை மட்டும் கொள்ளை கொண்டு போகவில்லை நமது உணவை மற்றும் பட்டினியால் உயிரையும் கொண்டு போனார்க. இதை தவிர பல வித போர்கள்.. பிரிட்டிஷ்காரர்களை உலகின் வல்லரசாக்க ஆக்க இந்திய வீரர்களை பல வெளிநாட்டு போர்களிலும் ஈடுபட வைத்தனர். இந்த கொலைகாரன் ஆளும் பொது இரண்டு பெரிய பஞ்சங்கள் வந்தன.  நமது சென்னை மாகாணத்தில் வந்த தாது வருட பஞ்சம் என்பது The Great Famine of 1876-1878 (also the Southern India famine of 1876-1878 or the Madras famine of 1877),மொத்தம் மூன்று பஞ்சங்களில் இந்த அயோகியன் ஆண்ட பொது இரண்டு வந்து கொள்ளை பேரை பட்டினியால் கொன்று தீர்த்த பயல் இவன்..

Leave A Reply

Your email address will not be published.